வீடியோ-அசத்தும் குழந்தை., ஆன்லைன் வகுப்பு அட்ராசிட்டி: எல்லாரும் கெக்கபுக்க கெக்கபுக்க!

|

ஆன்லைன் வகுப்பை இமிடேட் செய்து குழந்தை ஒருவர் ஆசிரியர் படும்பாடை நகைச்சுவை உணர்வோடு அழகாக பேசியுள்ளார். சரளமான ஆங்கில வார்த்தை கலந்து நகைச்சுவை தமிழ் சொற்களை தூவி குழந்தை பேசும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

கொரோனா இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் பரவல் காரணமாக ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத நிலை

பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத நிலை

குறிப்பாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகள் போதாமல் பள்ளி கல்லூரிகள் கொரோனா வார்டாக மாற்றும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கேள்விக்குறியான மாணவர்களின் படிப்பு

கேள்விக்குறியான மாணவர்களின் படிப்பு

நோய் பரவல் காரணமாக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. சில பள்ளி கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறது. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் என்பது கிராமப் பகுதிகள், இன்டெர்னெட் வசதி, ஆன்லைன் வகுப்புகளுக்கான சாதனங்கள் இல்லாத மாணவர்களின் நிலையை கவலைக்கிடமாக மாற்றியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

அதேபோல் திடீரென ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களிடம் திணிப்பது என்பது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாகவே உள்ளது என பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டும் வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற சாதனங்கள் இருந்தாலும் அதற்கான சூழல் இல்லாததால் வீட்டில் பெற்றோர்களின் வேலைக்கு மத்தியில் ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் படும்பாடு

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் படும்பாடு

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் படும்பாடை சுட்டிக் காட்டி குழந்தை ஒருவர் அழகாகவும் ரசிக்கும் விதமாக பேசியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் அவஸ்தையை அவரே வெளிப்படுத்தினால்கூட இந்தளவு இருக்காது என்றே கூறலாம்.

ஹலோ நான் ஜானகி டீச்சர் பேசுறேன்

அதில் ஹலோ நான் ஜானகி டீச்சர் பேசுறேன் என தொடங்கி பசங்க வகுப்பை அட்டண்ட் பண்றாங்களோ இல்லையோ அவுங்க பெற்றோர் தவறாம வகுப்பு அட்டண்ட் பண்றாங்க எனவும் அதில் அம்மாக்கள் பல்துளக்கி கொண்டே கேமரா முன் வருகிறார், அப்பா குட்டையாக ட்ரவுசர் அணிந்துக் கொண்டு அங்குட்டும் இங்குட்டும் சுத்துகிறார் என கூறியது பார்ப்போர் முகத்தில் சிரிப்பை தவறாமல் வர வைக்கிறது.

நோட்ஸ் எடுக்குறாங்களோ இல்லையோ உயிரை எடுக்குறாங்க

மாணவர்கள் நோட்ஸ் எடுக்குறாங்களோ இல்லையோ உயிரை நன்றாக எடுக்கிறார்கள் எனவும் இதுல ப்ரின்சிபல் பையனுக்கு அவர் ரெக்கமண்ட் வேற வராறு என கிண்டலாக அந்த குழந்தை இமிட்டேட் செய்யும் வீடியோ பார்ப்போர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு ரசிக்க வைக்கும் விதமாக உள்ளது. ஆங்கிலத்தில் சரளமாக பேசி தமிழ் நகைச்சுவை வார்த்தையை அதில் திணித்து ரசிக்க வைத்திருப்பது அழகாக உள்ளது என்ற கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
small girl imitates online class: video viral in social media!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X