ஸ்கைப் சினாப்சாட் புதிய சிறப்பம்சங்கள் என்ன?

By Prakash
|

ஸ்கைப் தன்னுடைய இணையவழி குரல் பரிமாற்ற நுட்ப (விஒஐபி) மென்பொருளின் மூலமாக, இணையத் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியைத் தோற்றுவித்தது.

ஸ்கைப் சினாப்சாட் புதிய சிறப்பம்சங்கள் என்ன?

உலகெங்கும் உள்ள புதிய, பழைய நண்பர்களையும், பலகாலங்களாக காணாத உறவினர்களையும் ஸ்கைப் தன்னுடைய உடனடித் தகவல், குரலரட்டை மற்றும் அசைபட அரட்டைச் சேவை மென்பொருள் மூலம் இணைக்கிறது. ஸ்கைப் இந்த வகையில் மிகுந்த புகழ்பெற்ற மென்பொருள் ஆகும். இது ஏன் பிரபலம் என்பது இதன் நயமான இடைமுகம், பயனாளி சினேக வடிவமைப்பு ஆகியவற்றைக் கண்டால் புரியும். ஸ்கைப்பின் அசைபட அழைப்புகள் இலவசமாகும். சாதாரணத் தொலைபேசிகளை அழைக்க சில காசுகளைச் செலவிட வேண்டுமென்றாலும் அது அவசியம் இல்லை.

இந்த மென்பொருள், ஸ்கைப் பயனாளிகள் ஒருவர் இன்னொருவருக்கு கணிணியின் மூலம் அழைத்துப் பேச உதவியது. ஸ்கைப் மேசைக்கணினி மட்டுமில்லாமல் கைக்கணினிகள், நுண்ணறிபேசிகள் போன்றவற்றிலும் உபயோகிக்கக் கிடைக்கிறது.

தற்போது ஸ்கைப் ஒரு புதியப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது குழு அரட்டை மூலம் பல்வேறு நண்பர்களுடன் மிக எளிமையாக உரையாடமுடியும். இவற்றில் பல்வேறு மென்பொருள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது இவற்றில் ஏற்பட்டுள்ள புது ஹைலைட்ஸ் ஆகும்.

இந்த "சிறப்பம்சங்கள்" புகைப்படங்களையும் வீடியோ கிளிப்களையும் பதிவு செய்ய உதவுகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோரிடனும் பார்க்க சிறப்புரைகளை இடுகையிடலாம். இந்த வசதியை ஆண்ட்ராய்டில் மட்டுமே உபயோகம் செய்ய முடியும்.

இவற்றில் சிறப்பான வீடியோ கால் அழைப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது,இவை மிகவும் தெளிவாக செயல்படும் வண்ணம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Skype just got a massive makeover with Snapchat features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X