Home
News

அம்மாடி.. இவ்வளவு கம்மி விலையில் பார்ட்டி ஸ்பீக்கரா? சவுண்ட் பட்டையை கிளப்புது.! உடனே வாங்குங்க..

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பார்ட்டி செய்ய ஒரு நல்ல ஸ்பீக்கர் சாதனத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்படினால், உங்கள் தேர்வு இந்த புதிய ஸ்கைபால் ப்ளூடூத் ஸ்பீக்கராக தான் இருக்க வேண்டும். கம்மி விலையில் பெஸ்ட் பார்ட்டி டிவைஸ் இது தான்.

அதிக சவுண்ட், ஸ்ட்ராங்கான பாஸ், RGB லைட்டிங் என்று பார்ட்டி செய்வதற்காவே உருவாக்கப்பட்ட டிவைஸ் தான் இந்த ஸ்கைபால் பார்ட்டி பாக்ஸ் 400 வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் (Skyball Party Box 400 speaker). ஸ்கைபால் நிறுவனம் இந்த சாதனத்தை இந்திய சந்தையில் இப்போது புதிய சேர்ப்பாக அதன் புளூடூத் ஸ்பீக்கர் வரிசையில் சேர்த்துள்ளது.

அம்மாடி.. இவ்வளவு கம்மி விலையில் பார்ட்டி ஸ்பீக்கரா? அதிரும் சவுண்ட்..

இந்த புதிய ஸ்கைபால் பார்ட்டி பாக்ஸ் 400 வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் ஆடியோ தயாரிப்புஒரு போர்ட்டபிள் ஸ்பீக்கர் சாதனமாகும். கடந்த மாதம், நிறுவனம் ஸ்கைபால் ரிகர் (Skyball Rigor) மற்றும் ஸ்கைபால் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் (Skyball Elevate smartwatch) சாதனங்களை அறிமுகம் செய்தது. அதற்கு அடுத்தபடியாக, நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பார்ட்டி ஸ்பீக்கர்களைப் பற்றி பார்ப்போம்.

ஸ்கைபால் பார்ட்டி பாக்ஸ் 400 ஸ்பீக்கர் விபரங்கள்
இது ஒரு போர்ட்டபிள் ஸ்பீக்கராக இருந்தாலும், ஸ்கைபால் பார்ட்டி பாக்ஸ் 400 ஆனது 40W சவுண்ட் அவுட்புட்டை வழங்குகிறது. இது ட்ரூ 40W சூப்பர் பாஸ் ஒலியைக் கொண்டுள்ளது. டைனமிக் பூஸ்ட் டெக்னாலஜி மூலம் மேம்படுத்தப்பட்ட 360° சரவுண்ட் ஸ்டீரியோ சவுண்ட் செட்டப் மூலம் இது மிகவும் துல்லியமான ஆடியோ சிக்னேச்சரைக் கொண்டுள்ளது.

இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கரில் உயர்தர டிரைவர்கள் மற்றும் இரண்டு 3-இன்ச் ட்வீட்டர்கள் உள்ளன. இது வலுவான இணைப்பு விருப்பங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வயர்லெஸ் ஸ்பீக்கர் இசை மற்றும் திரைப்படங்களுடன் வீட்டு பொழுதுபோக்கிற்கு ஏற்றது. டைனமிக் மல்டி-பார்ட்டி லைட் எஃபெக்ட்களுக்கான RGB லைட்டிங்கைக் கொண்டிருக்கிறது.

இது கண்ணைக் கவரும் பார்ட்டி லைட்டிங்கை தருவதோடு பியூச்சர்ஸ்டிக் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது தவிர, நிறுவனம் ஆயுள் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் IPX5 மதிப்பீட்டுடன் வருகிறது. இந்த புதிய ஸ்பீக்கரில் பெல்ட் ஆபரேஷன் ஆதரவுடன் டூயல் கிரிப் ஹேண்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய 4,500mAh பேட்டரி பேக் அம்சத்தை கொண்டுள்ளது.

அம்மாடி.. இவ்வளவு கம்மி விலையில் பார்ட்டி ஸ்பீக்கரா? அதிரும் சவுண்ட்..

இந்த போர்ட்டபிள் பார்ட்டி ஸ்பீக்கரை இந்த பெரிய பேட்டரி தொடர்ந்து 5 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் உத்தரவாதத்துடன் இயக்குகிறது. இது சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி டைப் சி (USB Type-C) போர்ட்டையும் ஆதரிக்கிறது மற்றும் 30m வரம்பை வழங்குகிறது.

ஸ்கைபால் பார்ட்டி 400 ஸ்பீக்கர் விலை என்ன?
இந்த புதிய ஸ்கைபால் பார்ட்டி 400 புளூடூத் ஸ்பீக்கர்கள் தற்போது Amazon மற்றும் இந்தியாவில் உள்ள பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. இதன் அதிகாரப்பூர்வ விலை ரூ. 9,999 ஆகும். ஆனால், நிறுவனம் இதை இப்போது வெறும் ரூ, 4,999 விலையில் அறிமுக சலுகையுடன் வழங்குகிறது. இந்த அரிய வாய்ப்பை பார்ட்டி செய்ய விரும்பும் மக்கள் உடனே வாங்குவது சிறந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Skyball Party Box 400 speaker launched in India at Rs 4999 as introducing offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X