மூன்று வண்ண விருப்பம், 12மணிநேர பேட்டரி ஆயுள்: அட்டகாச ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்!

|

ஹெட்போன் மற்றும் இயர்போன் வர்த்தகம் இந்தியாவில் நாளுக்கு நாள் மிக விரைவாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஏராளமான நிறுவனங்கள் தரமான மற்றும் மலிவு விலை ஹெட்போன் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடுகின்றன. அந்த வரிசையில் ஸ்கல்கேண்டி நிறுவனம் தனது புதிய ஹெட்போன்களையும் இயர்போன்களையும் அறிமுகப்படுத்துகிறது. ஸ்கல்கேண்டி க்ரஷர் என்ற இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஆடியோ தயாரிப்புகளின் பிராண்டாகும். இந்த சவுண்ட் சிஸ்டம் அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கின்றது. குறைந்த விலையில் பட்டையை கிளப்பும் வகையில் தனது ஆடியோ சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாம் பார்க்கலாம்.

மூன்று வண்ண விருப்பம், 12மணிநேர பேட்டரி ஆயுள்: ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்!

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு இயர்பட்ஸ், இயர்போன்கள் ஆகியவைகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. விலைக்கேற்ப அம்சங்களோடு பல்வேறு நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் ஏணைய நிறுவனங்களும் சாதனங்களை அறிமுகம் செய்துகொண்டே வருகிறது. இதில் ஸ்கல்கேண்டி நிறுவனமும் ஒன்று. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த இயர்பட்ஸ் விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதன் அம்சங்கள் சிறந்ததாகவே இருக்கிறது.

ஸ்கல்கேண்டி டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் மலிவு விலையில் குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் சந்தையில் வருகின்றன. பட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்களை மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மூன்று வண்ண விருப்பம், 12மணிநேர பேட்டரி ஆயுள்: ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்!

இது கூடுதலாக இலகுரக வடிவ அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்கல்கேம்டி டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மொத்த பேட்டரி ஆயுள் 12 மணிநேரம் ஆயுளை ஒரே சார்ஜிங்கில் வழங்குகிறது. குறுகிய தண்டு போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த இயர்பட்ஸ். இந்த இயர்பட்ஸ் மற்றும் டிடபிள்யூஎஸ் இயர்போன்களை தடையின்றி சுதந்திரமாக பயன்படுத்தலாம். ஸ்கல்கேம்டி டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் காதுகளில் கச்சிதமாக பொருந்துகிறது.

ஸ்கல்கேண்டி டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை இந்தியாவில் கிடைக்கும் விலை மற்றும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்த இயர்பட்ஸ் அடர் நீலம் பச்சை, வெளிர் சாம்பல் நீலம் மற்றும் உண்மையான கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 4 முதல் கிடைக்கும் டிடபிள்யூ இயர்பட்ஸ் ஸ்கல்கேண்டி இந்தியாவின் இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும்.

மூன்று வண்ண விருப்பம், 12மணிநேர பேட்டரி ஆயுள்: ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்!

ஸ்கல்கேண்டி டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் குறித்து பார்க்கலாம், இது டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 6மிமீ டிரைவர்களுடன் வருகிறது. 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் மறுமொழி வரம்பை வழங்குகிறது. இணைப்பிற்காக ப்ளூடூத் 5.0 பயன்படுத்தப்படுகிறது. இயர்பட்ஸ் உடல் பட்டன்களை கொண்டிருக்கிறது. இது இயர்பட்ஸ்களை கழற்றாமல் அளவை கட்டுப்படுத்தலாம். இயர்பட்ஸ்களை கழற்றாமல் இயர்பட்ஸ் அழைப்புகளை எடுக்கலாம். ஸ்கல்கேண்டி டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 20 எம்ஏஎச் பேட்டரி, காம்பாக்ட் சார்ஜிங் 150 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது 3.5 மணிநேரம் வரை ஆயுள் நீடிக்கும். ஒரே கட்டணத்தில் மொத்தம் 12 மணிநேர ஆயுள் காலத்தை வழங்குகிறது. இது மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அனைத்து வகை பயனருக்கும் ஏற்றவாறு உண்மையான தனித்துவ அம்ச அனுபவத்தை ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ் வழங்குகிறது. ஸ்கல்கேண்டி ஆப் மூலமாக தனிப்பயனாக்கப்பட்ட சத்தத்துடன் நாய்ஸ் ரத்து தொழில்நுட்பத்தோடு இயர்பட்ஸ் கிடைக்கிறது.

இயர்போனில் மைக்ரோஃபோன் வசதி இருக்கிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் தனித்தனியாக பயன்படுத்த ஸ்கல்கேண்டி டைம் உங்களை அனுமதிக்கிறது. இது ஐபிஎக்ஸ் 4 வாட்டர் மற்றும் வியர்வை ரெசிஸ்டென்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பான ஒலி இன்சுலேடிங் அமைப்பைக் கொண்டுள்ளது. இயர்பட்ஸ் எடை 32 கிராம் ஆகும். இந்த இயர்பட்ஸ்களின் ஒவ்வொரு சாதனத்திலும் மைக்ரோ போன் உள்ளது.

ஸ்கல்கேண்டி டைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை குறுத்து பார்க்கையில், இது 2,249 ஆக உள்ளது. இந்த இயர்பட்ஸ் டார்க் ப்ளூ க்ரீன், லைட் க்ரே ப்ளூ, ட்ரூ பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஸ்கல்கேண்டி இந்தியா வலைதளத்தில் இந்த இயர்பட்ஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Skullcandy Dime True Wireless Earbuds Launched with three Colours, 12 Hour Battery Life in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X