என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்?- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்!

|

மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் மற்றும் ப்ளூ வேல் சேலஞ்ச் என்று பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நேரத்தில் தற்போது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் என்று ஒரு மிக சர்ச்சையான சேலஞ்ச் என்ற ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது.

மோமோ சேலஞ்ச்

மோமோ சேலஞ்ச்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸஅப்பிற்கு ஏதோ முகம் தெரியாத நபர்கள் புதுப்புது கட்டளையிட்டு மிரட்டியுள்ளனர். அதை ஏற்க வேண்டும் மறுக்கும் விதத்தில் மனிதன்-விலங்கு-ஏலியன் என்ற கலவையில் கொடூரமான உருவம் பல்வேறு விதமான அலறல்களுடன் அச்சுறுத்தும். இறுதியில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவோம் என்று மிரட்டி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். அதுவே மோமோ சேலஞ்ச்

கிகி சேலஞ்ச்

கிகி சேலஞ்ச்

கிகி சேலஞ்ச் என்ற பெயரில் ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடுவது, பைக்குகளில் சாகசம் செய்வது என விநோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இந்த ‘கிகி சேலஞ்ச்' இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி, இளைஞர்கள், பெண்கள் என சாலையில் இந்த சாகசத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஒரு சிலரின் இந்தச் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. கிகி சேலஞ்ச் என்ற பெயரில் பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்வேறு மாநில காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தனது தலையில் தானே வாரிக் கொட்டிக் கொள்வது தான் இந்த சேலஞ்ச். இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்பது புறப்பட்டபடி இருந்த உடையுடன் அப்படியே ஐஸ்கட்டி போட்ட தண்ணீரை வாலியுடன் கொட்டிக் கொள்வது தான் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச்.

காக்ரோச் சேலஞ்ச்

காக்ரோச் சேலஞ்ச்

'காக்ரோச் சேலஞ்ச்'. முகத்தில் கரப்பான் பூச்சியை ஓடவிட்டு, சில நொடிகள் அப்படியே வைத்திருந்து, அதைப் போட்டோ எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. தைரியமானவர்கள் மட்டுமல்ல, கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பதறியடித்து ஓடும் பயந்தவர்களுமேகூட இந்த 'காக்ரோச் சேலஞ்சை செய்தனர்.

glue your lip சேலஞ்ச்

glue your lip சேலஞ்ச்

சமீபத்தில் #glueyourlip என்னும் புதிய சேலஞ்ச் டிக் டாக்-ல் வைரலானது. கொஞ்சம் விநோதமான சேலஞ்ச் தான் என்ன செய்வது அதுதான் டிக் டாக் பிரியர்களுக்கு பிடிக்கிறது. உதட்டை தடிமன் போல் பெருசாக்குவது தான் அந்த சேலஞ்ச். இது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

முந்திக் கொண்ட பெண்கள்

முந்திக் கொண்ட பெண்கள்

கடையில் விற்கும் க்ளூ வாங்கி பெண்கள் தங்களது அப்பர் லிபில் ஒட்டிக் கொள்கிறார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களின் மேல் உதட்டை அதன் மேல் ஒட்டுக்கொண்டார்கள். அது அப்படியே ஒட்டிக் கொள்கிறது. பார்ப்பதற்கு ரியல் பெரிதான உதடுகள் போல் கட்சியும் அளித்தது. இந்த #glueyourlip சேலன்ஞ் டிக்டாக்கில் பெரிதளவு வைரலானது.

தலைதூக்கும் வித்தியாசமான சேலஞ்ச்

தலைதூக்கும் வித்தியாசமான சேலஞ்ச்

தற்போது வித்தியாசமான சேலஞ்ச் ஒன்று தலை தூக்கி வருகிறது. இந்த சேலஞ்ச் என்பது தன்னை வருத்திக் கொள்வது என்பதை தாண்டி, உடன் இருப்பவர்களை தள்ளிவிடுவது போல் இந்த சேலஞ்ச் அமைந்துள்ளது. தள்ளிவிடுவது என்றால் சாதாரனமாக இல்லை.

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்

ஒருவரை நடுவில் நிறுத்தப்பட்டு அவரை குதிக்க வைக்கிறார்கள். அவர் குதிக்கும் நேரத்தில் அதாவது அந்த இரண்டு கால்களும் மேற்பரப்பில் இருக்கும் போது காலை தட்டிவிடுகிறார்கள். அவர் பின் தலை கீழே விழும் வகையில் இந்த சேலஞ்ச் உள்ளது. இதற்கு பேர் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் அதாவது தமிழில் மண்டை ஓடு உடைக்கும் சேலஞ்ச் என்று அர்த்தம்.

மாணவர் மத்தியில் வேகமாக பரவும் விளையாட்டு

இது தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆபத்தான இந்த விளையாட்டு மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மாதிரியான சேலஞ்சுகளில் குழந்தைகள் ஈடுபடுவதால், அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்படைவார்கள் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

வேண்டாம்., வேண்டாம்., விளையாட்டுக்கு கூட வேண்டாம்

மேலும், இந்த சேலஞ்சை, விளையாட்டாக கூட யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும், இதுபோன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் ஈடுபடாமல் தடுக்குமாறு பெற்றோர்களுக்கும் வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த செயலில் ஒருவர் கோமா போன்ற பெரிய வியாதியில் இருந்து உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரை ஏற்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
'Skull breaker challenge': Goes viral and dangerous on TikTok

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X