Home
News

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.!

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார், அப்போது கீபேட் மேலே சிறிய அளவு கேமராவை பார்த்துள்ளார், பின்பு அப்போதே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

ஸ்கிம்மர் கருவி ஒன்றும் சிறிய கேமராவும் ..

ஸ்கிம்மர் கருவி ஒன்றும் சிறிய கேமராவும் ..

மேலும் இயந்திரத்தை சோதனை செய்ததில் ஸ்கிம்மர் கருவி ஒன்றும் சிறிய கேமராவும் இயந்திரத்தை சோதனை செய்ததில்
ஸ்கிம்மர் கருவி ஒன்றும், சிறிய கேமராவும் பொருத்தப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

காவல்துறையினர் தகவல் அளித்தனர்

காவல்துறையினர் தகவல் அளித்தனர்

இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர், இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர், சென்னையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடும் நபர்கள் குறித்த விவரங்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இருப்பதால், அவர்களும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையடிப்பது தொடர்ந்து நடக்கிறது

கொள்ளையடிப்பது தொடர்ந்து நடக்கிறது

ஏற்கனவே ஏடிஎம் மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளை பொருத்தி அதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை விவரங்களை திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடக்கிறது. இது தொடர்பாக வெளிநாட்டினர் உட்பட பலர் கைது செய்யட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்

ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்

நாம் வழக்கமாக பணம் எடுக்க கையாலும் மெசினாக ஏடிஎம்கள் இருக்கின்றன. நாம் பணம் எடுக்கும் போது, வங்கி டெபிட் கார்டை பொருத்துகிறோம். பிறகு நமக்கு தேவையான பணத்தை எடுக்க தேர்வு செய்வோம். பிறகு அதில் பரிமாற்றம் நடக்க 4 இலக்க பின்னை எண்டர் செய்வோம். நாம் பணத்தை எடுத்துவிட்டோம் என்று ஹாயாக வீடு திரும்புவோம். ஆனால், ஏடிஎம் மெசின்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், அதில் வங்கி கணக்கு, பின் உள்ளிட்ட தகவல்களை முழுமையாக ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்.

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு

சிலர் வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை காலாவதியாகி விட்டது. ஆகையால் உங்களுக்கு புதுப்பித்து தருகிறோம், என்று நமது செல்போன்களுக்கு அழைத்து, வங்கி டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள், ரகசிய குறியீடு, ஓடி உள்ளிட்டவைகளையும் பெற்றுக் கொண்டு பணத்தை திருடி விடுவார்கள். எனவே வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக
இருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
skimmers-allegedly-installing-cameras-skimmer-on-atm-in-chennai : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X