அசத்தல் : ஆகாய வித்தைகள் நிகழ்த்தும் உலகின் 'குட்டி' ட்ரோன்..!
தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு 'பறக்கும் ட்ரோன்கள்' ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஏனெனில் ராணுவம், பாதுகாப்பு, உளவு, திரைப்படம், கொரியர், தபால், ஆய்வு என பலவகை துறைகளிலும் இந்த ட்ரோன்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ரிப் : உடலை 'சல்லடை' போடும் உலகின் கொடூரமான 'புல்லட்' (வீடியோ)..!
பல துறை பயன்பாட்டிற்கு பின் ட்ரோன்கள் தற்போது, ஒரு விளையாட்டு பொருள் என்ற அளவிற்கு பரவிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியாக புதிதாக சந்தையில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் ட்ரோன் தான் - ஸ்கேயி பிக்கோ ட்ரோன் (SKEYE Pico Drone)..!
அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!
வீடியோ :
ஆகாய வித்தைகள் நிகழ்த்தும் உலகின் 'குட்டி' ட்ரோன் - ஸ்கேயி பிக்கோ ட்ரோன்..!

சிறிது :
ஸ்கேயி பிக்கோ ட்ரோன் (SKEYE Pico Drone) ஆனது மிகவும் புதிது மட்டுமில்லை, மிகவும் சிறியதும் கூட, இது தான் உலகின் மிகவும் சிறிய ட்ரோன் ஆகும்..!

வடிவமைப்பு :
நெதர்லாந்தை சேர்ந்த ட்ரென்ட்லாப்ஸ் (TRNDlabs) இதை வடிவமைத்து, தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரல்நுனி :
இதை உங்கள் விரல்நுனியில் இருந்துகூட 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் 'லான்ச்' (Launch) செய்ய முடியும்..!

எளிமை :
முன்பின், ட்ரோன்களை பயன்படுத்தி பழக்கம் இல்லை என்றாலும் கூட இதை எளிமையாக பயன்படுத்திக் கொள்ளும்படியாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தொழில்நுட்பம் :
இதில் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ள 'ரெடி டு ஃப்ளை' (Ready to Fly) தொழில்நுட்பம் மற்றும் 3 லெவெல் சென்சிட்டி (3 Level Sensitivity) ஆனது இதை இறுக்கமான சூழ்நிலைகளில் கூட அருமையாக பறக்க வைக்குமாம்.

விலை :
இதை இயக்கும் ரிமோட் கன்ரோலின் உள்ளேயே வைத்துக்கொள்ளும் படியான அளவில் இருக்கும் இதன் விலை வெறும் 35 டாலர்கள் மட்டுமே ஆகும்..!

ஆர்டர் :
இதை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications