நாங்கள் குழந்தைகள் இல்லையா., எதுக்கு இவ்வளவு: 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை!

|

நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதாகவும், அதிக ஹோம் வொர்க் கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவிக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆன்லைன் வகுப்பு குறித்து புகார்

ஆன்லைன் வகுப்பு குறித்து புகார்

ஆன்லைன் வகுப்பு நீண்ட நேரம் நடப்பதாகவும் குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் ஆறு வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சியை தனியார் செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த வீடியோவானது சுமார் 45 நிமிடம் ஓடுகிறது.

சிறுமி பிரதமருக்கு கோரிக்கை

சிறுமி பிரதமருக்கு கோரிக்கை

இந்த வீடியோவில் சிறுமி கூறியிருப்பதாவது, ஆன்லைன் வகுப்பு காலை 10 மணிமுதல் மதியம் வரை நடக்கிறது. ஐந்து பாடங்கள் வகுப்பு நடப்பதோடு தொடர்ந்து கம்ப்யூட்டர் வகுப்பும் நடக்குது. குழந்தைகளுக்கு அதிகமான வேலை இருக்கு., எதுக்கு சின்ன குழந்தைக்கு இவ்வளவு வேலை வேண்டும்., என்னதான் செய்வது மோடி ஐயா என கூறியிருந்தார்.

டுவிட்டரில் வெளியான வீடியோ

டுவிட்டர் வெளியான இந்த வீடியோகாட்சி பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பலரது விருப்பங்களையும் பெற்று வருகிறது. இந்த வீடியோ காட்சியானது 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பமும், 1200 ரீடுவிட்களும் பெற்றுள்ளது.

பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை

பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீடியோ கால் மூலமாக வகுப்புகளை எடுத்து வந்தனர். கொரோனா பரவல் கொஞ்சம் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மெதுவாக கட்டுப்பாடுகளுடன் திறக்கும் நிலைக்கு வந்தது.

கொரோனா பரவல் இரண்டாம் அலை

கொரோனா பரவல் இரண்டாம் அலை

இருப்பினும் கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதேசூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகள் தேர்வுகளை, தேர்வு நாட்களையும், தேர்வு எழுதும் முறையையும் அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பு

மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பு

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மேலும் சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிகள் விதித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில் இனி வரும் நாட்களில் ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலு்ம பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை பள்ளி நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.

குழு அமைக்க உத்தரவு

குழு அமைக்க உத்தரவு

மேலும் இதுகுறித்து முதலமைச்சர் அளித்த உத்தரவில், ஆன்லைன் வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்கனர், சைபர் கிரைம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு அதிகாரிகள், உளவியல் நிபுணர்கள் ஆகிய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் நடவடிக்கை

பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் நடவடிக்கை

மேலும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையிலான பரிந்துரைகளை வாரத்திற்குள் தயாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஆன்லைன் வகுப்புகளில் முறையில்லாமல் நடந்துக் கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

Best Mobiles in India

English summary
Six Year Old Girl Video Message to Prime Minister Narendra Modi About Online Class

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X