வாட்ஸ்ஆப்பின் இந்த 6 அம்சங்களைப் பற்றி தெரியுமா உங்களுக்கு.?

வாட்ஸ்ஆப் பெற்றுள்ள நாம் அதிகம் அறிந்திராத 6 முக்கிய அம்சங்களைப்பற்றியும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் ஒரு பார்வை.

By Ilamparidi
|

முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் நிறுவனம் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்டது.ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு உள்ளிட்டவற்றில் பயன்படுத்தத்தக்க வகையில் உருவாக்கப்பட்டது.பயனாளர்களுக்கான வசதிகளினால்,எளிய முறையில் பயன்படுத்தக்க எளிய வழிகளினால் குறைந்த கால அளவுக்குள்ளாகவே உலகம் முழுவதும் அதிகப்படியான பயனாளர்களை ஈர்த்தது.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 900 மில்லியன் மக்கள் பயன்படுத்தியிருந்தனர்.மேலும் இந்நிறுவனத்தை பேஸ்புக் 19.3 பில்லியன் கொடுத்து கையகப்படுத்தினர்.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தை முகநூல் நிறுவனம் வாங்கியப்பிறகு இதில் வீடியோ கால்,கிப்ட் உள்ளிட்ட பல அம்சங்களை புகுத்தி உள்ளனர்.இவற்றைத் தவிர்த்து நாம் அறிந்திராத 6 முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

டூ ஸ்டெப் அத்தென்டிகேஷன்:

டூ ஸ்டெப் அத்தென்டிகேஷன்:

இந்த முறையினை சென்ற ஆண்டின் இறுதியிலிருந்தே வாட்ஸ்ஆப் முன்னோட்டமாக வழங்கி வந்தது.இப்போது இதனை வெண்டுமென்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த முறையின் மூலம் உங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி ஆகியவற்றைக்கொண்டு 6 இலக்க கடவு எண் ஒன்றினை உருவாக்கி உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் போன் எதிர்பாராத விதமாக தொலைதல் போன்ற நிகழ்வுகளின் போது வேறு எவரும் பயன்படுத்தாதவகையில் நாம் பாதுகாக்க இம்முறை உதவும்.

வாட்ஸ்ஆப் குரூப்பில் தனி மெசேஜ்க்கு பதில் அனுப்ப:

வாட்ஸ்ஆப் குரூப்பில் தனி மெசேஜ்க்கு பதில் அனுப்ப:

ஏதேனும் வேலைகளின் போதோ அல்லது பார்க்காமல் விட்ட வாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் ல் தனிப்பட்ட ஏதேனும் ஓர் மெசெஜ்க்கு பதிலளிக்க எந்த மெசஜ்க்கு பதிலளிக்க வேண்டுமோ அதனை அழுத்திப்பிடித்து பின்பக்கம் வரக்கூடிய பட்டனை செலக்ட்செய்து ஆண்ட்ராய்டு ஐபோன் உள்ளிட்டவற்றில் ரிப்ளை என்ற ஆப்ஷன் வழியே நாம் பதிலளிக்கலாம்.

குரூப்பில் மெசேஜ் யாரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறிய:

குரூப்பில் மெசேஜ் யாரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறிய:

இரு நபர்களுக்கு இடையேயான சாட்டில் மெசேஜ் பற்றிய தகவல்களை எளிதாக தெரிந்துகொள்ளலாம் ஆனால் நீங்கள் உள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில் உங்கள் மெசேஜ் எத்தனைப்பேரால் பார்க்கப்பட்டது எனக்கண்டறிய எந்த மெசேஜ் பற்றிய தகவல்கள் வேண்டுமோ அந்த மெசேஜ் யினை அழுத்திப்பிடித்து இப்போது திரையில் காட்டும் 'i' என்ற குறியினை செலக்ட் செய்தால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் பற்றிய தகவல்களை நாம் கண்டறியலாம்.

வாய்ஸ் மெசேஜ்:

வாய்ஸ் மெசேஜ்:

வாட்ஸ்ஆப் சாட்டிங்கின் போது ஆடியோ ஏதேனும் வந்தால் அதனை பிளே செய்தால் ஸ்பீக்கர் முறையில் ஒலிக்கிறது அப்படியான நேரங்களில் உடனே மொபைலை உங்கள் காதின் அருகே கொண்டு சென்றால் தானாகவே ஸ்பீக்கர் மோடில் இருந்து சாதாரண நிலையில் ஒலிக்கும்.

குறியீடுகள்:

குறியீடுகள்:

வாட்ஸ்ஆப்பில் நமக்கு தேவையான குறியீடுகளை ஏற்ற நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.உதாரணமாக *குறிப்பிட்ட* இதனைப்போன்று நட்சத்திரக் குறியீடுகள் இடுவதன் மூலம் நாம் முக்கியமானதாக குறிப்பிட நினைப்பதை பிறருக்கு உணர்த்தலாம்.

குரூப்பில்:

குரூப்பில்:

வாட்ஸ்ஆப் குரூப்பில் தனியான எவரேனும் குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் அனுப்புகையில் @ இந்த குறியிட்டு அனுப்புவதன் மூலம் அந்த நபரின் கவனத்திற்கு நாம் எளிதில் கொண்டு செல்லலாம்.ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்துவதனைப் போல.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Six WhatsApp Features You May Not Know About.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X