நம்ம சிவகங்கை பையனா இதை செய்தது?- கலங்கிப் போன நிறுவனம்., ஐபிஎல் ரசிகர்களே இது தெரியுமா?

|

2021 ஆம் ஆண்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி நிர்வாகி காடரம் துப்பா என்பவர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் ஐபிஎல் இணைப்பை அடையாளம் காண முடியாத நபர்கள் திருடி இலவசமாக ஒளிபரப்பி வருவதாக புகார் அளித்திருந்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் ரவீந்தர் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்கும் செயலி

ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்கும் செயலி

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில்., அவர், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கல் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 29 வயதான இவர் ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்கும் வகையில் வித்தியாசமான ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளார், இந்த தளத்தில் சில நிறுவனங்களின் விளம்பரங்களும் ஒளிபரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

ராமமூர்த்தியை கைது செய்த சிவகங்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஐபிஎல் போட்டியை இலவசமாக தனி செயலி உருவாக்கிய சம்பவமானது கிரிக்கெட் வட்டாரம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. தற்போது ராமமூர்த்தி சிவகங்கை முகமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் ராமமூர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

31 லீக் போட்டிகள் நிறைவு

31 லீக் போட்டிகள் நிறைவு

ஐபிஎல் 15-வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இதுவரை 31 லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. ஐபிஎல் சீசனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.16,347 கோடி செலுத்தி வாங்கி இருக்கிறது. இந்த ஒப்பந்தமானது 2018 முதல் 2022 வரை செல்லுபடியாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கிறது. ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியிலோ அல்லது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலோ பார்க்கலாம். இதுபோன்ற இலவச செயலி மூலம் பார்ப்பதால் உரிமம் பெற்ற நேரடி நிறுவனத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கருதப்படுகிறது.

ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்கும் வழிமுறை

ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்கும் வழிமுறை

ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்க வேண்டும் என்றால் அதற்கு முறையான வழி இருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் பேக்கில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் ரூ.1,499 மற்றும் ரூ.4,199 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச பிரீமியம் சந்தா அணுகலை வழங்குகிறது. இந்த திட்டங்களில் நீண்ட கால செல்லுபடி மற்றும் பல நன்மைகள் வழங்குகின்றன.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரூ.1,499 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.1,499 என்ற விலைக்கு தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. புதிய திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. ஜியோ ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரீமியம் சந்தா அணுகலை வழங்குகிறது. ரூ.1,499 திட்டத்தைத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் பெறுவார்கள்.

ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் சந்தா

ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் சந்தா

ஜியோ அறிமுகப்படுத்திய மற்றொரு புதிய சலுகை ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டமாகும். ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கிறது. இதன் முக்கிய நன்மை என்னவென்றால், இது ஒரு வருடாந்திர திட்டம். ரூ.4,199 விலையில், ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் சலுகையை வழங்குகிறது. இந்த திட்டமானது ரூ.4,199க்கு தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. புதிய திட்டத்தில், ஜியோ வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை அணுகலை வழங்குகிறது. ரூ.4,199 திட்டம் பிரீமியம் சந்தாவுடன் கிடைக்கிறது. மற்ற எல்லா ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலவே நீங்கள் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.

Best Mobiles in India

English summary
Sivagangai Youth Arrest For Who Made App to See Ipl live For Free

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X