ஓட்டர் ஐடி இருக்கா.. 2026 ஜனவரி 18 கதை முடிஞ்சிரும்.. உடனே இதை பண்ணி முடிங்க.. இல்லனா சிக்கலுக்கு மேல சிக்கல்!
எஸ்ஐஆர் (SIR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் சிறப்புத் தீவிர திருத்தம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Roll) வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் பெயர் இருப்பதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதிக்குள் என்ன செய்ய வேண்டும். இப்படி வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் 2026 (Draft Voter List 2026) உங்களது பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் போர்ட்டல் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் போர்டல் ஆகியவற்றில் இதை செய்ய முடியும். மாநில தேர்தல் ஆணையத்தில் பிடிஎப் பைல்கள் கிடைக்கும். அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இதில் உங்களது வாக்கு சாவடியில் வாக்கு செலுத்தும் ஒட்டுமொத்த பேரின் விவரங்கள் இருக்கும். இந்திய தேர்தல் ஆணையத்தில் பெயர் மட்டுமே இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். முதலில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் போர்ட்டலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
1. முதலில் www.elections.tn.gov.in என்னும் போர்டலுக்கு சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 (Special Intensive Revision 2026) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் 2026 (Draft Electoral Roll 2026) விருப்பம் தோன்றும். இதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது, உங்களது மாநிலம் கேட்கப்படும். இதை கொடுத்துவிட்டால், திருத்த வருடம், எஸ்ஐஆர் வரைவு வாக்காளர், மாவட்டம், மற்றும் சட்டமன்றம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். ஆகவே, முதலில் 2026 ஆண்ட்டை தேர்ந்தெடுங்கள், அடுத்து எஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்ந்தெடுங்கள், அடுத்து உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
3. இறுதியாக உங்களது சட்டமன்றத்தை தேர்ந்தெடுங்கள். இந்த விவரங்களை கொடுத்தால் போதும், பாகம் எண் மற்றும் பாகம் பெயர் ஆகியவற்றின் பட்டியல் கொடுக்கப்படும். அதாவது, உங்களது வாக்கு சாவடியின் எண் மற்றும் அதனுடைய பெயர் காண்பிக்கப்படும். இதில் உங்களது பகுதியின் பின்கோட் இடம்பெற்றிருக்கும். இதே விவரங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட எஸ்ஐஆர் படிவத்திலும் இருக்கும்.
4. இந்த விவரங்களை வைத்து வாக்கு சாவடியை கண்டிபிடித்துவிடுங்கள் அல்லது பட்டியலுக்கு மேலே இருக்கும் தேடலில் உங்களது வாக்கு சாவடி இருக்கும் கிராமம் அல்லது பகுதியின் பெயரை கொடுத்தாலே அது தெரிந்துவிடும். இதில் இருக்கும், டிக்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் அந்த வாக்கு சாவடியில் இருக்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் விவரங்கள் இருக்கும்.
5. இதில் உங்களது வரிசை எண்ணை வைத்து பெயரை பார்த்து கொள்ளலாம். அதேபோல உங்களது வீட்டில் இருக்கும் உறவினர்களின் விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம். இந்த விவரங்களில் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், வயது மற்றும் வீட்டு எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதேபோல வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் இருக்கும்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பெயரை இருப்பதை கண்டறிவது எப்படி?
1. முதலில் electoralsearch.eci.gov.in என்னும் போர்டலுக்கு செல்லுங்கள். இப்போது, மூன்று விதமாக பெயரை தேடிக்கொள்ளலாம். முதலில் வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC) நம்பர் மற்றும் மாநிலத்தை கொடுத்து தேடலாம். அடுத்து பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து தேடலாம்.
3. மூன்றாவது, மொபைல் நம்பர் வழியாக தேடலாம். இந்த மூன்று விருப்பங்களும் மேலேயே தோன்றும். இதில் உங்களிடம் இருக்கும் விவரங்களை பொறுத்து நீங்கள் தேடி கொள்ளலாம். அதில் அந்த வாக்காளரின் விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இவற்றில் பெயர் இல்லை என்றால், என்ன செய்ய வேண்டும்.
பெயர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்
1. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லாதபட்சத்தில் மீண்டும் இணைக்க ஜனவரி 18 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் இருக்கிறது. இதற்காக படிவம் 7 இருக்கிறது. இதை ஆப்லைன் அல்லது ஆன்லைனில் சமர்பிக்கலாம். ஆப்லைனில் உங்களுக்கு எஸ்ஐஆர் படிவத்தை வழங்கிய பிஎல்ஓ (BLO) அலுவலரிடம் கொடுக்கலாம். அவரே படிவம் வைத்திப்பார்.
2. ஆன்லைனில் வழக்கமாக voters.eci.gov.in/ என்னும் போர்டலுக்கு சென்று, ஹோம் பேஜ்ஜில் இருக்கும் படிவம் 7 விருப்பத்துக்கு சென்று உங்களது விவரங்களை கொடுத்து இணைத்து கொள்ளலாம். இதில் படிவம் 6, படிவம் 8, படிவம் 6ஏ போன்றவை இருக்கும். இதில் படிவம் 7 மட்டுமே நீக்கப்பட்ட பெயருக்காக கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








