ஒரே எண், பல பயன்கள் அவசர எண் 112 குறித்த முக்கிய தகவல்கள்

அவசர கால உதவி எண் '112' என்ற எண் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

|

அவசர கால உதவி எண் '112' என்ற எண் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே எண், பல பயன்கள் அவசர எண் 112 குறித்த முக்கிய தகவல்கள்

அமெரிக்காவில் பலவிதமான அவசர சேவைகளுக்கு '91' என்ற ஒற்றை எண் அமலில் இருப்ப்து போல இந்தியாவிலும் அவசர உதவிக்காக '112' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அறிமுகம் செய்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியபோது, இந்த எண் 112 என்பது இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும், இந்த ஒரே ஒரு எண்ணை பயன்படுத்தி மக்கள் ஆபத்து அல்லது மன அழுத்தத்தில் இருந்தால் தங்களை காத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

112 என்ற இந்த எண் மூலம் போலீஸ், தீயணைப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கு அழைக்கலாம். இந்த அவசர உதவி எண் மூலம் காவல் (100), தீயணைப்பு (101), பெண்கள் (1090) ஆகிய பிரிவுகள் உண்டு. '112' என்ற ஒற்றை உதவி எண்ணின் மூலம் இந்த சேவைகளை பெற்று கொள்ளலாம்

அதேபோல் மருத்துவ உதவிகளுக்கும் 108 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த உதவி எண் 112 என்பது 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், தாதர் நாகர் ஹவேலி, அகமதாபாத், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், ஜம்மு காஷ்மீர், மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளது.

ஒருவர் தனக்கான அவசர கால உதவி சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்றால் அவர் உடனே தன்னுடைய போனில் '112'-ஐ டயல் செய்யவேண்டும். அல்லது ஸ்மார்ட் போனின் பவர் பொத்தானை 3 முறை தொடர்ச்சியாக அழுத்தினால் போதும்

ஒரே எண், பல பயன்கள் அவசர எண் 112 குறித்த முக்கிய தகவல்கள்

இந்த 112 உதவி எண் சேவை ஏற்கனவே இமாச்சல பிரதேசம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் அமலில் உள்ளது. 2018ஆம் ஆண்டில் இமாச்சல பிரதேசத்தில்தான் இந்த எண் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

விரைவில் இந்த அவசர உதவி எண் சேவை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Single emergency helpline number '112' launched: All you need to know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X