இலவச சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை எங்கிருந்து வாங்குவது? இன்று முதல் நடைமுறைக்கு வந்த புது சேவை..
மெட்ரோ ரயில் (மெட்ரோ), புறநகர் மின்சார ரயில் (Suburban electric train) மற்றும் சென்னை மாநகர பொதுப்பெருந்துகளில் (Chennai city bus), ஒரே ஸ்மார்ட் டிக்கெட் கார்டு (Smart ticket card) மூலம் பயணிக்கும் சிங்கார சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டு திட்டம் (Singara Chennai One City One Card) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் படி, சென்னை மக்கள் இனி ஒவ்வொரு போக்குவரத்துக்கு சேவைக்கும் தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை.
முதற்கட்டமாக, சிங்கார சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டு திட்டத்தின் கீழ் 50,000 ஸ்மார்ட் கார்டுகள் இலவசமாக இன்று மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஒன் சிட்டி ஒன் கார்டு சேவையை மக்கள் எப்படி பயன்படுத்தலாம்? மற்றும் மக்கள் எங்கிருந்து இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டுகளை இலவசமாக (Free Singara Chennai Smart Card) பெறலாம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இலவச சிங்கார சென்னை ஸ்மார்ட் ஒன் சிட்டி ஒன் கார்டை எங்கிருந்து வாங்குவது? (Singara Chennai One City One Card):
சென்னையில் உள்ள அணைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டைகள் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகம்படுத்தப்பட்டது. ரீசார்ஜ் (Singara Chennai Smart Card Recharge) செய்து பயன்படுத்திக்கொள்ளும் படி, அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மக்கள் நீண்ட வரிசையில் டிக்கெட் எடுக்க காத்திருக்கலாம், ஸ்மார்ட் அட்டையை வைத்து நேரடியாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
இன்று சிங்கார சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டு என்ற புதிய திட்டத்தின் மூலம் இனி சென்னை மக்கள் ஒரே ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் (மெட்ரோ), புறநகர் மின்சார ரயில் (Suburban electric train) மற்றும் சென்னை மாநகர பொதுப்பெருந்துகளில் பயணிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் சென்னை மக்கள் இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டைகளை பயன்படுத்தி பொதுப்பெருந்துகளில் (Singara Chennai One City One Card Use in City Bus) பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு (Free Singara Chennai Smart Card):
இந்த புதிய சேவையை இன்று போக்குவரத்துக்கு துறை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைக்கிறார். ஸ்டேட் பங் ஆப் இந்தியா (State Bank Of India) மூலம் தற்போதைக்கு 50,000 சிங்கார சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டுகள் இலவசமாக விநியோகம் (Free Singara Chennai Smart Card Distribution) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோயம்பேடு (Koyambedu), பிராட்வே (Broadway) பேருந்து நிலையங்களில் இந்த அட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் உள்ள பயணசீட்டு விற்பனை மையங்களில் இருந்து இந்த சிங்கார சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டுகளை மக்கள் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் அட்டைகளை மக்கள் எளிமையாக ரீசார்ஜ் செய்துகொள்ள பல்வேறு வழிவகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பெருந்துகளில் பயணிக்கும் மக்கள் நடத்துனரிடம் அட்டையை வழங்கி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
அல்லது, ஆன்லைன் (Online) வழியாகவோ அல்லது பயணசீட்டு விற்பனை மையங்களில் கட்டணம் (Ticket counters) கொடுத்து சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டைகளை பொதுமக்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். தற்போது பொதுப்பெருந்துகளில் இந்த அட்டையை மக்கள் பயன்படுத்தி பயணிக்கலாம். விரைவில், மின்சார ரயில்கள், விரைவு ரயில்களிலும் மக்கள் இந்த அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் வசதியை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








