'லேப் வளர்ப்பு இறைச்சி' சாப்பிட ஒப்புதல் கிடைத்தது.. உண்மையில் இது மனிதர்களுக்கு நல்லது தானா?

|

சிங்கப்பூரின் உணவு ஒழுங்குமுறை நிறுவனம், அமெரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'ஈட் ஜஸ்ட்' உருவாக்கிய வளர்ப்பு இறைச்சியின் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. விலங்கு உயிரணுக்களிலிருந்து வளர்க்கப்படும் செயற்கை இறைச்சியை விற்பனை செய்ய அனுமதி வழங்கிய முதல் உலக நாடாக இப்பொழுது சிங்கப்பூர் உள்ளது. இப்போது சிங்கப்பூரில் இந்த வளர்ப்பு இறைச்சிகள் சிக்கன் பைட் உணவாக விற்கப்படுகிறது.

இது செயற்கை இறைச்சி அல்ல வளர்ப்பு இறைச்சி..

இது செயற்கை இறைச்சி அல்ல வளர்ப்பு இறைச்சி..

'நாங்கள் உருவாக்கியுள்ள எண்களின் கோழி கறி "செயற்கை இறைச்சி" அல்ல' என்று ஈட் ஜஸ்ட் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ நொயஸ் கூறியுள்ளார். நாங்கள் தயாரிக்கும் இறைச்சிகள் 'வளர்ப்பு இறைச்சி' ஆகும். இவை விலங்கு உயிரணுக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, வழக்கமான இறைச்சியின் அதே உள்ளீடு மற்றும் அத்தியாவசிய கலவைகள் இதில் அப்படியே பாதுகாப்புடன் உள்ளது என்று அவர் விளக்கியுள்ளார்.

சிங்கப்பூரின் உணவு அமைப்பு ஒப்புதல்

சிங்கப்பூரின் உணவு அமைப்பு ஒப்புதல்

சிங்கப்பூரின் உணவு அமைப்பின் ஒப்புதலைப் பெறுவதற்காக, ஈட் ஜஸ்ட் நிறுவனம் அதன் வளர்ப்பு கோழி இறைச்சியின் தன்மை மற்றும் தயாரிப்பு, தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செயல்முறை போன்ற விரிவான ஆவணங்களை வழங்க வேண்டியிருந்தது. இதற்காக நிறுவனம் அதன் உற்பத்தி செயல்பாட்டின் போது கோழி உயிரணுக்களின் தூய்மை, இறைச்சியின் அடையாளம் மற்றும் நிலைத்தன்மை பற்றி விவரித்து, ஒப்புதலை வாங்கியுள்ளது.

ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!

1200 லிட்டர் பயோரியாக்டரில் உருவாக்கப்படும் இறைச்சி

1200 லிட்டர் பயோரியாக்டரில் உருவாக்கப்படும் இறைச்சி

மேலும் தயாரிப்பு தரக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வரம்புகளை பூர்த்தி செய்து, இவர்களின் வளர்ப்பு இறைச்சிகள் பாதுகாப்பானது என்பதை ஈட் ஜஸ்ட் நிறுவனம் நிரூபித்துள்ளது. ஈட் ஜஸ்ட் அதன் வளர்ப்பு கோழி உற்பத்தியின் 20-க்கும் மேற்பட்ட உற்பத்தி ஓட்டங்களை 1200 லிட்டர் பயோரியாக்டரில் நிறைவு செய்துள்ளது. மேலும், அதன் தனியுரிம செயல்முறை நுண்ணுயிர் எதிர்ப்புகளைப் பயன்படுத்தாது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் தூய்மையான இறைச்சி

பாதுகாப்பு மற்றும் தூய்மையான இறைச்சி

"பாதுகாப்பு மற்றும் தரச் சரிபார்ப்புகள்" அறுவடை செய்யப்பட்ட வளர்ப்பு கோழி இறைச்சியின் தரத்தைப் பூர்த்திசெய்தது என்பதை நிறுவனம் நிரூபித்தது, வழக்கமான கோழியை விட மிகக் குறைந்த மற்றும் குறிப்பிடத்தக்கத் தூய்மையான நுண்ணுயிரியல் உள்ளடக்கம் இதில் உள்ளது" என்பதையும் நிறுவனம் நிரூபித்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும் வளர்ப்பு இறைச்சி தயாரிப்பில் உள்ள சில நன்மைகளையும் நிறுவனம் விளக்கியுள்ளது.

கூகிள் மேப்ஸ் காட்டும் ஆண் பிறப்புறுப்பு சிற்பம் கலாச்சார நினைவுச்சின்னமா? தொடரும் அடுத்தடுத்த மர்மம்.!கூகிள் மேப்ஸ் காட்டும் ஆண் பிறப்புறுப்பு சிற்பம் கலாச்சார நினைவுச்சின்னமா? தொடரும் அடுத்தடுத்த மர்மம்.!

இனி உயிர்கள் கொல்லப்படாது

இனி உயிர்கள் கொல்லப்படாது

வளர்ப்பு இறைச்சிகளில் புரத உள்ளடக்கம், மிகவும் மாறுபட்ட அமினோ அமில கலவை, ஒப்பீட்டளவில் அதிக அளவிலான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் தாதுக்களின் நன்மை இதில் உள்ளது என்பதை நிறுவனத்தின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "வளர்ப்பு இறைச்சி காரணமாக இனி உயிர்கள் கொல்லப்படாது என்பதை நிறுவனம் அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

விரைவில் உலகம் முழுவதும்

விரைவில் உலகம் முழுவதும்

சிங்கப்பூரில் ஒப்புதல் கிடைத்துத் துவங்கியுள்ள இந்த புதிய பயணம் விரைவில் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இறைச்சிக்கான மாற்று, இறைச்சி சுகாதாரம், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளுக்கு இந்த புதிய முயற்சிக்குப் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.

இரண்டாம் உலக போரில் நாஜி தலைவர்கள் பயன்படுத்திய எனிக்மா இயந்திரம் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு..இரண்டாம் உலக போரில் நாஜி தலைவர்கள் பயன்படுத்திய எனிக்மா இயந்திரம் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு..

இது மனிதர்களுக்கு நல்லது தானா?

இது மனிதர்களுக்கு நல்லது தானா?

இருப்பினும், இது மனிதர்களுக்கு நல்லது தானா? மனிதர்களின் உணவு பழக்கத்தில் இப்படி ஒரு அனாவசிய மாற்றம் அவசியம் தானா? என்ற கேள்விகள் நெஞ்சில் எழுகிறது. வளர்ப்பு இறைச்சி என்பது கண்களைக் கவரும் தொழில்நுட்பம் தான், ஆனால் இது நம் உணவு முறைகளை மாற்றுவது என்பது சரித்தானது அல்ல என்றே தோன்றுகிறது.

தீவிரமான விலங்கு விவசாயம் மற்றும் இறைச்சி விவசாயம்

தீவிரமான விலங்கு விவசாயம் மற்றும் இறைச்சி விவசாயம்

இந்த பிரச்சினைக்கு, நாம் வெறுமனே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிடுவதும், அல்லது அதை குறைவாகச் சாப்பிடுவதுமே போதுமான தீர்வாக இருக்கக் கூடும்.தீங்கு விளைவிக்கும் தீவிரமான விலங்கு விவசாயம் அல்லது ஒரு ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி நமக்கு தேவையில்லை.

397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

கார்ப்பரேட் நிறுவனங்களை நாம் சார்ந்து இருப்பது நல்லதா?

கார்ப்பரேட் நிறுவனங்களை நாம் சார்ந்து இருப்பது நல்லதா?

ஆய்வகங்களில் இறைச்சியை வளர்க்கப்படும் இறைச்சிகள் விலங்குகளைக் காப்பாற்றவும், கிரகத்தைக் காப்பாற்றவும் தான் என்ற வாக்கியங்களுக்கு மரியாதை கொடுத்து, நம் அடிப்படைத் தேவை என்ன என்பதை உணர்ந்து நாமே இதைச் சரி செய்துகொள்ள வேண்டும். இறைச்சி சாப்பிடுவதற்கு கூட தொழில்நுட்பத்துடன் கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களை நாம் சார்ந்து இருப்பது நல்லதா என்று நீங்களே சிந்தியுங்கள்?

Best Mobiles in India

English summary
Singapore govt Approves Lab-Grown Meat : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X