Home
News

கோடை வெப்பத்தில் சீலிங் ஃபேன் ஸ்பீடு பிச்சுக்கனுமா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.. எளிய வழிமுறைகள்!

தமிழ்நாட்டில் கோடை காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் வீட்டின் உட்புறம் அனல் காற்று வீசுவது போலவும், புழுக்கமாகவும் இருப்பதை நாம் அனைவரும் உணர்கிறோம். இக்காலகட்டத்தில் ஏசி வசதி இல்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு சீலிங் ஃபேன் (Ceiling Fan) மட்டுமே ஒரே புகலிடமாக இருக்கிறது.

ஆனால், பல நேரங்களில் ஃபேன் முழு வேகத்தில் ஓடினாலும் போதிய காற்று வராமல் போவதை நாம் கவனித்திருப்போம். உங்கள் சீலிங் ஃபேனின் வேகத்தை அதிகரித்து, கோடையை சமாளிக்க உதவும் சில முக்கிய ஆலோசனைகள் இதோ:

கோடை வெப்பத்தில் சீலிங் ஃபேன் ஸ்பீடு பிச்சுக்கனுமா? இதை பண்ணுங்க!

தூசி, காற்று, பராமரிப்பு அவசியம்: ஃபேனின் வேகம் குறைவதற்கு மிக முக்கியமான மற்றும் எளிமையான காரணம் அதன் இறக்கைகளில் (Blades) படியும் தூசிதான். நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யப்படாத இறக்கைகளில் ஒரு தடிமனான அடுக்கு போல தூசி படிந்துவிடும். இது இறக்கையின் எடையை அதிகரிப்பதுடன், காற்றின் இயக்கவியலை (Aerodynamics) பாதிக்கிறது. இதனால் மோட்டார் அதிக சிரமப்பட்டுச் சுழலும், ஆனால் காற்று கீழே வராது. எனவே, மாதம் ஒருமுறை ஈரத் துணி கொண்டு இறக்கைகளைச் சுத்தம் செய்வது ஃபேனைப் புதியது போல வேகமாக்கும்.

கெப்பாசிட்டர் (Capacitor) முக்கிய பங்கு: உங்களது ஃபேனை 1-ல் வைத்தாலும் 5-ல் வைத்தாலும் ஒரே வேகத்தில் ஓடுகிறது என்றால், அதன் கெப்பாசிட்டர் பலவீனமாகிவிட்டது என்பதும் முக்கிய காரணமாகும். சீலிங் ஃபேனுக்குத் தேவையான தொடக்க ஆற்றலை வழங்குவது இதுதான். மிகக் குறைந்த செலவில் (சுமார் 50 முதல் 100 ரூபாய்க்குள்) ஒரு புதிய கெப்பாசிட்டரை வாங்கி மாற்றுவதன் மூலம் ஃபேனின் வேகத்தை உடனடியாக அதிகரிக்க முடியும்.

உராய்வை குறைத்தல் (Lubrication): ஃபேன் ஓடும்போது கீச்-கீச் என்ற சத்தம் வருகிறது என்றால், அதன் பேரிங்குகளில் (Bearings) சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தமாகும். ஏனென்றால், உராய்வு அதிகமாகும்போது வேகம் குறையும். மின்சாரத்தை துண்டித்துவிட்டு, பேரிங்குகளில் சிறிது ஆயில் அல்லது கிரீஸ் தடவலாம். ஆனால், இதற்கு தகுந்த அனுபவம் வேண்டும். இல்லையென்றால், புதிதாக வேறு பேரிங்கை மாற்றி கொள்ளலாம்.

ரெகுலேட்டர் மற்றும் மின்னழுத்தம்: பழைய மாடல் ரெகுலேட்டர்கள் சில நேரங்களில் மின்சாரத்தை சரியாகக் கடத்தாது. இப்போது சந்தையில் கிடைக்கும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் மின்சாரத்தை விரயம் செய்யாமல் ஃபேனைச் சீராக இயக்க உதவுகிறது. அதேபோல, உங்கள் பகுதியில் வோல்டேஜ் (Voltage) குறைவாக இருந்தாலும் ஃபேன் மெதுவாகவே ஓடும். ஆகவே, எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் பயன்படுத்தலாம்.

ஃபேனின் இறக்கைகளில் வளைவு: உங்களது ஃபேனின் இறக்கைகள் லேசாக வளைந்திருந்தாலோ அல்லது கோணம் மாறியிருந்தாலோ காற்று சிதறிப் போகும். அனைத்து இறக்கைகளும் ஒரே மட்டத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த எளிய பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலம், புதிய ஃபேன் வாங்காமலேயே உங்கள் பழைய ஃபேனை அதிவேகத்தில் இயங்க செய்யலாம்.

இந்தக் கோடை வெயிலிலிருந்து தப்பிக்கலாம். பாதுகாப்புக் கருதி, ஃபேனைச் சரிபார்க்கும் போது மின் இணைப்பை முழுமையாகத் துண்டிக்க மறக்காதீர்கள். அதேபோல குழப்பம் இருந்தால் எலக்ட்ரீசியன் உதவியை நாடுவது நல்லது. குறிப்பாக வாரத்துக்கு ஒரு முறை ஃபேனை சுத்தம் செய்ய வேண்டும். இறக்கைகளில் அதிக தூசி படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். ரெகுலேட்டர் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
Simple Ways to Increase Ceiling Fan Speed ​​in the Summer Heat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X