ஸ்மார்ட்போனை விற்பதற்கு முன், உங்களது தகவல்களை பாதுகாப்பது எப்படி.??
oi
-Meganathan
By Meganathan
இன்றைய ஸ்மார்ட்போன் காலக்கட்டத்தில் பணம், மற்றும் ஆசை கொண்ட பெரும்பாலான மக்கள் அடிக்கடி தங்களது ஸ்மார்ட்போன் கருவியை மாற்றி கொண்டே இருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். இது போல் அடிக்கடி ஸ்மார்ட்போன்களை மாற்றுவது ஒன்றும் பெரிய குற்றமல்ல. ஆனால் விற்பனை செய்யும் முன் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் உங்களது தகவல்களை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
புகைப்படம், வீடியோக்களில் துவங்கி வங்கி சார்ந்த தகவல்கள் வரை அனைத்தையும் பாதுகாப்பாக வைத்தல் அவசியமாகும். ஒரு வேலை தகவல்கள் வெளியே கசிந்தால் அனைவருக்கும் தலைவலி தான். ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் முன் கட்டாயம் செய்ய வேண்டிய பாதுகாப்பு காரியங்கள் எவை என்பதை தொடர்ந்து பாருங்கள்.
தரவுகளை பேக்கப் செய்தல்
வாழ்க்கையை ஆன்லைன் மோடில் அனுபவிப்பவர்கள் தங்களது கருவிகளை பேக்கப் செய்வது உங்களது ஆன்லைன் தகவல்களை அப்படியே புதிய கருவியிலும் பயன்படுத்த வழி செய்யும். தரவுகளை பேக்கப் செய்ய கருவியினை கணினியுடன் இணைத்து தரவுகளை கணினியில் பாதுகாப்பது நல்லது.
தரவுகளை முழுமையாக அழித்தல்
இது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். உங்களது தகவல்களை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க கருவியினை பேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது கருவியின் செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் பேக்கப் மற்றும் ரீசெட் ஆப்ஷனில் பேக்கப் டேட்டா மற்றும் ஆட்டோமேடிக் ரீஸ்டோர் போன்ற ஆப்ஷன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனினை தவிர்ப்பது அவசியமாகும்.
இவ்வாறு செய்த பின் நீங்கள் அழித்த தகவல்களை மீட்க வழியே கிடையாது. இதனால் சந்தையில் கிடைக்கும் செயலிகளை கொண்டும் அழித்த தகவல்களை மீட்க முடியாது.
மெமரி கார்டினை ஃபார்மட் செய்தல்
பெரும்பாலான கருவிகளிலும் இன்டர்னல் மெமரி மற்றும் கூடுதலாக மெமரி கார்டு செலுத்தும் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றன. இதனால் கருவியை வழங்கும் முன் அதனினை முற்றிலுமாக அழித்துவிட்டி கார்டினை ஃபார்மட் செய்வது அவசியமாகும்.