உங்க வீட்டில் ஃபிரிட்ஜ் இருக்குதா? அப்போ கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்.!
இன்றைய நவீன வாழ்க்கையில் ஏசி, வாஷிங் மெஷின் போன்று ஃபிரிட்ஜ் ( குளிர்சாதனப் பெட்டி) என்பது ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய தேவையாகி விட்டது. குறிப்பாக இதைப் புரிந்து கொண்ட பல முன்னணி நிறுவனங்கள் பலவிதமான ஃபிரிட்ஜ் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன.
அதேபோல் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, வாஷிங் மெஷின் போன்ற மின் உபயோக பொருட்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது அதற்கான வல்லுநர்களை வைத்துப் பராமரிப்பது மிகவும் நல்லது. சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது ஃப்ரிட்ஜ்-ஐ வீட்டில் பாதுகாப்பாக வைப்பது எப்படி மற்றும் அவற்றைச் சரியான முறையில் பராமரிப்பதும் எப்படி என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கண்டென்சர் காயில்
அதாவது இந்த ஃபிரிட்ஜ் பராமரிப்பில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், கண்டென்சர் காயிலை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். குறிப்பாகத் தூசி அடைந்திருந்தாலும் ஃபிரிட்ஜின் செயல்பாடு குறையும். பின்பு இதனால் கம்பிரசர் அதிக சூடாகி வெப்பத்தை வெளியேற்றும். மேலும் இதை அறிய ஃபிரிட்ஜின் அருகில் சென்றாலே போதும் வெப்பத்தை உணரலாம். குறிப்பாக உங்கள் ஃப்ரிட்ஜில் அதிக வெப்பம் வருகிறது என்றால் உடனே கண்டென்சரை பரிசோதித்து மாற்றுவது அல்லது சுத்தம் செய்வது மிகவும் நல்லது.
இடைவெளி தேவை
அதேபோல் சுவரை ஒட்டி ஃபிரிட்ஜை வைக்கவே கூடாது. ஏனெனில் கண்டென்சர் காயில் வெளியிடும் வாயு எந்த தடையும் இன்றி வெளியேற வேண்டும். எனவே தான் சுவற்றில் இருந்து சற்று இடைவெளி விட்டு வைக்க வேண்டும். ஒரு வேளை எலி தொல்லை இருந்தால் கண்டென்சரை பாதுகாக்க வலை கட்டுவது மிகவும் அவசியம்.

பிளக் பாய்ண்ட் முக்கியம்
ஃபிரிட்ஜ் பொறுத்தவரைச் சரியான கிரவுண்ட் எர்த் முக்கியம். பின்பு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஃப்ரிட்ஜின் பிளக் பாய்ண்டை எலக்ட்ரீஷியன் வைத்துப் பரிசோதிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக ஃபிரட்ஜ் வைத்திருப்பவர்கள், எர்த் லீக்கேஜ் சர்கியூட் பிரேக்கர் (ELCB) கருவி அதிகமாக மின்சாரம் பாய்வதை தடுக்கும் என்பதால் ஃபிரிட்ஜின் பிளக் பாய்ண்டை அதில் பொருத்தலாம். பின்பு இதனால் அதிக எர்த் வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை எர்த் லெவல் அதிகமானால் கூட இந்த கருவி ஃபிரிட்ஜ் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரப்பர் மேட் அவசியம்
குறிப்பாக உங்களது ஃபிரிட்ஜ் அருகில் எப்போதும் ஒரு ரப்பர் மேட் போட்டு, அதன் மீது நின்று ஃபிரிட்ஜ் கதவைத் திறப்பது நல்லது. அதாவது எர்த்தின் வீரியம் காரணமாக ஃப்ரிட்ஜ் முழுவதும் அது பாய்ந்திருந்தால், ஃபிரிட்ஜை திறக்கும் போது மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவேதான் ரப்பர் மேட் மீது நின்று கொண்டு கதவைத் திறப்பது மிகவும் நல்லது.
சுத்தம் செய்வது நல்லது
உங்களது ஃபிரிட்ஜ் பின்புறம் இருக்கும் பாக்ஸில் வெளியேறும் ஃபிரிட்ஜ் தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. குறிப்பாக அந்த நீர் தானாகவே ஆவியாகிவிடும். இருந்தபோதிலும் நீண்ட நாட்களுக்குத் தேங்காமல் பார்த்துக்கொள்ளச் சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

மூன்று அல்லது ஆறு மாதங்கங்கள்
முன்பு கூறியது போல் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஃபிரிட்ஜ் பழுது பார்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற விபத்துகளை எளிமையாகத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








