எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரயில் டிக்கெட் வேண்டுமா..?

By Meganathan

பண்டிகை தினங்களில் ரயில் டிக்கெட் பெறுவது மிகவும் சவாலான விஷயமாகவே இருக்கின்றது, 'மற்ற நேரங்களில் மட்டும் எளிமையாகவா கிடைக்குது' என கொதிப்பவர்களுக்காக இந்த தொகுப்பினை 'டெடிகேட்' செய்கின்றோம்..

எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக அனுகினால் வெற்றி நிச்சயமே, 'அதுக்கு இப்ப என்ன செய்யலாம்' னு யோசிக்கிறவங்க எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்பதை பாருங்கள்..

திட்டம்

திட்டம்

முடிந்த வரை பயணச்சீட்டுகளை முன்பாகவே முன்பதிவு செய்வது பயணம் குறித்த தலைவலியை பாதியாக குறைக்கும். ரயில் பயணச்சீட்டுகளை அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும்.

வெயிட்டிங் லிஸ்ட்

வெயிட்டிங் லிஸ்ட்

உங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் பயணச்சீட்டு கிடைத்திருந்தால் இந்த தளத்தில் உங்களது சீட்டு உறுதி செய்யப்படுமா என்பதை கணித்து கொள்ள முடியும்.

ஸ்டேஷன் கோடு

ஸ்டேஷன் கோடு

பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் முன் உங்களது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க Indianrail.gov.in தளம் இருக்கின்றது. இங்கு ரயில் நேரங்கள், தடம் எண் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம், அதிக நேரம் இருந்தால் மட்டுமே மெயில் ரயிலில் பயணம் செய்யவும்.

தட்கல்

தட்கல்

தட்கல் முறையில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஆட்டோஃபில் பட்டனை பயன்படுத்தலாம். இதன் மூலம் அதிக நேரத்தை மிச்சம் செய்ய முடியும்.

கேஷ் ஆன் டெலிவரி

கேஷ் ஆன் டெலிவரி

ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் சிரமம் இருந்தால் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் BookMyTrain செயலி மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.

வெயிட் லிஸ்ட்

வெயிட் லிஸ்ட்

ரயில் டிக்கெட் வெயிட் லிஸ்டில் இருந்தால் அதனினை உடனடியாக விமான பயணச்சீட்டாக மாற்ற முடியும், இந்த திட்டத்தில் விமான பயணச்சீட்டுகளை 30-40 சதவீதம் வரை விலை குறைவாக பெற்று கொள்ள முடியும். இந்த திட்டம் பயணம் செய்வதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ரயில் யாத்ரி

ரயில் யாத்ரி

உங்களது ரயில் நேரங்களை சரியாக அறிந்து கொள்ள ரயில் யாத்ரி பயன்படுத்தி கொள்ளலாம்.

உணவு

உணவு

ஸ்மார்ட்போன் ஆப் ட்ராவல் காணா மூலம் முக்கியமான ரயில் நிலையங்களில் உணவுகளை ருசிக்க முடியும், இதில் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேப்

மேப்

ரயில் பயணங்களுக்கு ஏற்ற மேப் கையில் வைத்திருப்பது அவ்வப்போது உதவியாக இருக்கும். முடிந்த வரை மேப் பயன்படுத்தி சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்.

 
Read more about:
English summary
Check out here the Simple Tips to Make Your IRCTC Experience Less Painful. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X