Home
News

ஒரே செயலி., மொத்த கட்டுப்பாடும் உங்க கையில்: mAadhaarApp பயன்படுத்துவது எப்படி?

பிரதான ஆவணமாக ஆதார் கார்ட் மாறி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆதார் கார்ட்டில் ஏற்பட்டிருக்கும் ஒரு சில பிழைகளை எளிதாக திருத்தினாலும் குறிப்பிட்ட பிழைகளை திருத்துவது கடினமான செயலாகவே இருக்கிறது. ஆதார் அட்டையில் இருக்கும் பிறந்த தேதி, பெயர் பிழை உள்ளிட்ட தகவலை திருத்துவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. mAadhaarApp மூலம் ஆதார் கார்ட்டில் உள்ள குறிப்பிட்ட பிழைகளை சரிசெய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டில் உள்ள பிழைகள் சரிசெய்யும் வழிமுறைகள்

ஆதார் கார்டில் உள்ள பிழைகள் சரிசெய்யும் வழிமுறைகள்

mAadhaarApp மூலம் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், முதலில் தங்களது கூகுள் ப்ளே ஸ்டோருக்குள் சென்று mAadhaarApp என்ற செயலியை பதிவிக்கம் செய்ய வேண்டும். அதேபோல் நீங்கள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சென்று mAadhaarApp-ஐ பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

ஆதார் பதிவு என்ற விருப்பம்

ஆதார் பதிவு என்ற விருப்பம்

அதன்பின் mAadhaarApp செயலிக்குள் சென்று என் ஆதார் பதிவு என்ற விருப்பத்தை தேர்வு செய்து உங்கள் ஆதார் எண், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்டவையை பதிவிட்டுக் கொள்ளலாம். இதன்பின் தாங்கள் பதிவிட்ட எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி எண்ணை பதிவிட்டு உள்ளே நுழையலாம். இந்த செயல்பாடு அனைத்தும் நிறைவுற்ற பிறகு உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கு எண் மற்றும் பெயர் மட்டும் காண்பிக்கப்படும்.

பிழையை திருத்தம் செய்யும் வழிமுறை

பிழையை திருத்தம் செய்யும் வழிமுறை

இந்த பயன்பாட்டுக்குள் சென்றதும் ஆதார் பக்கம் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் பிழையை திருத்தம் செய்து தகவலை புதுப்பித்துக் கொள்ளலாம். தகவலை திருத்தி புதுப்பிப்பு செய்த பிறகு கீழே காட்டப்படும் கேப்ட்சாவை சரியாக உள்ளிடுவது அவசியம். இந்த அனைத்து செயல்பாடும் முடிந்த பிறகு ஓடிபி பரிந்துரை என்பதை தேர்வு செய்ய வேண்டும். பெறப்படும் ஓடிபி-ஐ சரியாக உள்ளிடுவது அவசியம். இதன்பின் உங்கள் புதுப்பிப்பு பக்கம் காண்பிக்கப்படும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை மாற்றம் செய்வதுற்கு ரூ.50 வசூலிக்கப்படும். இதை ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்யலாம்.

பான் மற்றும் ஆதார் கார்ட் இணைப்பது எப்படி

பான் மற்றும் ஆதார் கார்ட் இணைப்பது எப்படி

அதேபோல் பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இணைக்கபடாதவர்கள் எப்படி இணைக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். அவரவர் ஆதார் எண்ணுடன் அவரவர் பான் எண் இணைக்காவிட்டால் குறிப்பிட்ட பான் கார்டுகள் முடக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம். இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...

வருமான வரித்துறையின் வலைதளம்

வருமான வரித்துறையின் வலைதளம்

வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்

வழிமுறை-1: முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் ஆதார் பான் இணைப்பு இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

வழிமுறை-2 அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3 அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

வழிமுறை-4 பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-5 அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

Best Mobiles in India

English summary
Simple Steps to Correct Aadhaar Card Mistakes: How to Use mAadhaarApp
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X