புதிய சிம் கார்டு விதிகள்.. பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்களுக்கு வருகிறது முக்கிய மாற்றம்!
இந்திய அரசங்கமானது எம்என்வி (MNV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன் (Mobile Number Validation) என்கிற தளத்தை, அதாவது மொபைல் நம்பர்களை சரிபார்க்கும் தளத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறது. இந்த தளம் "இன்றைய இந்தியாவிற்கு" ஒரு முக்கியமான தேவையாக இருக்குமென்றும் கருதுகிறது.
வழக்கமாக, ஒரு அக்கவுண்ட்டை திறக்க வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், அவர்கள் அக்கவுண்ட் உடன் இணைக்கும் மொபைல் நம்பரை தாங்கள் தான் வைத்திருகிறார்கள் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆக அவர்களால் தங்களுக்கு சொந்தமில்லாத மொபைல் நம்பரை ஒரு அக்கவுண்ட் உடன் இணைக்க முடியும்.

இந்த இடத்தில் தான் மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன் தளமானது - வங்கிகளுக்கு கைகொடுக்க உள்ளது. எம்என்வி என்று அழைக்கப்படும் இந்த முன்மொழியப்பட்ட தளத்தின் மூலம் - வங்கிகள் (Banks), என்பிஎப்சி-கள் (அதாவது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் - Non-banking finance companies) மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களால் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் உடன் (அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல்-ன் கீழ்) பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களை அடையாளம் காண முடியும்.
ஆக ஒரு மொபைல் எண்ணை வழங்கும் வாடிக்கையாளர் தான் அந்த மொபைல் எண்ணிற்கு உண்மையான உரிமையாளர் அல்லது சொந்தக்காரர் என்பதற்கான சான்று கிடைக்கும். டிஜிட்டல் மோசடிகள் (Digital frauds) அதிகரித்து வருவதாலும், மோசடி செய்பவர்கள் வங்கிகளையும், அரசாங்கத்தையும் ஏமாற்ற நாளுக்கு நாள் புதிய வழிகளை கண்டுபிடிப்பதாலும் - இந்த மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன், ஒரு முக்கியமான தேவையாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், முன்மொழியப்பட்ட எம்என்வி தளமும், இதன் கீழான புதிய விதிகளும் - பல பங்குதாரர்களை எரிச்சலடைய செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த தளம், வாடிக்கையாளர்களின் தனியுரிமையை (Privacy) தடுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர், இது உண்மையிலேயே மிகவும் சரியான கவலை தான்.
ஆனாலும் பண மோசடி - அதைவிட பெரிய கவலையாக உள்ளது. இதன் விளைவாக கிராமப்புற மற்றும் பிராந்திய மக்களை இலக்காக கொண்டு அரசாங்கம் பல விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி வருகிறது. இந்த வழியில், நுகர்வோர் ஏமாற்றத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும், மேலும் குற்றங்களை சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் புகாரளிக்கவும் முடியும் என்று நம்புகிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும் எம்என்வி தளம் அறிமுகம் செய்யப்படுமா? புதிய சிம் கார்டு விதிகள் அமலுக்கு வருமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இப்போதைக்கு "பேங்கிங்" தொடர்பாக அதாவது வங்கிகள் தொடர்பாக உறுதி செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்றால், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பல வகையான யுபிஐ (UPI) பணபரிவர்தனைகளின் லிமிட் உயர்த்தப்பட உள்ளது. என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது, யுபிஐ சேவையில் குறிப்பிட்ட வகைகளுக்கான பரிவர்த்தனை வரம்பை செப்டம்பர் 15, 2025 முதல் அதிகரிக்க உள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் காப்பீடு செலுத்துதல், கடன் இஎம்ஐ-கள் அல்லது சந்தைகளில் முதலீடு செய்தல் போன்ற பெர்சன்-டூ-மெர்சன்ட் (P2M) பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும். அதாவது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பெர்சன்-டூ-பெர்சன் (P2P) பணப்பரிமாற்றங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கான தினசரி வரம்பு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications