பழைய SIM கார்டை உடைச்சு போடுங்க.. புது SIM வாங்குங்க.. வரப்போகும் புது ரூல்ஸ்.. பின்னணி காரணம் சீனா தானா?
உங்கள் போனில் உள்ள பழைய சிம் கார்டுகளை (SIM card) உடனே மாற்றம் செய்ய கோரி விரைவில் ஒரு புதிய விதி நடைமுறைக்கு வரப்போவதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான பழைய சிம் கார்டுகளில் உள்ள சில சிப்செட்கள் சீனாவிலிருந்து உருவானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பிருப்பதால், பழைய சிம் கார்டுகளை உடைத்தெறிந்துவிட்டு, புதிய சிம் கார்ட்டை பயன்படுத்த கூறும் விதிமுறை நடைமுறைக்கு வரவிருப்பதாக தெரிகிறது.
தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) என்ற விஐ (Vi) உள்ளிட்ட முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், தொலைத்தொடர்பு வளங்களுக்கான கொள்முதல் செயல்பாட்டில் உள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

பழைய SIM கார்டை உடைச்சு போடுங்க.. புது SIM வாங்குங்க.. வரப்போகும் புது ரூல்ஸ்:
அதேபோல், ஜியோ (Jio), ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனத்தின் பழைய சிம் கார்டுகளை மாற்றுவதற்கான (old SIM card change) ஒரு கட்டமைப்பு பற்றிய விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசாங்கம் ஏற்கனவே, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக, Huawei மற்றும் ZTE போன்ற சீன உபகரண உற்பத்தியாளர்களுக்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சீனா (China producrs) தயாரிப்புகள் இந்தியாவில் பயன்படுத்த பலகட்ட சோதனையை சந்திக்க வேண்டும் என்பதும் விதிமுறையாக இருக்கிறது.
சீனா தயாரிப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய (Import), விற்க (sale) அல்லது பயன்படுத்த (usage) திட்டமிட்டால், அவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு, கட்டாய சோதனை மற்றும் சான்றிதழைப் (certificate) பெற வேண்டும். இதில் குறிப்பாக தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கு (telecommunication equipment's) இந்த விதி கட்டாயமானது. இந்த ஒழுங்குமுறை சோதனை கட்டமைப்பு, தொலைத்தொடர்பு உபகரணங்கள் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.
சீன சிப்செட்களை அடக்கிய சிம் கார்டுகள் இந்தியாவிற்குள் புழக்கம்:
இப்படிப்பட்ட கடுமையான விதிகள் மற்றும் சோதனை இருந்த போதிலும், சீன சிப்செட்களை அடக்கிய சிம் கார்டுகள் (SIM cards with China chipsets) இப்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று விசாரித்த போது உண்மை புலப்பட்டது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் (Telecom operators) பொதுவாக சிம் கார்டு (SIM card) கொள்முதலை நம்பகமான சப்ளையர்கள் என்று சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் ஒப்படைப்பார்கள். இது வழக்கமான ஒன்று தான்.
இந்த விற்பனையாளர்கள் வியட்நாம் (Vietnam) மற்றும் தைவான் (Taiwan) போன்ற அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலிருந்து சிப்களைப் பெறுகிறார்கள். பின்னர் மொபைல் சேவை வழங்குநர்களுக்கு வழங்குவதற்கு முன்பு உள்நாட்டில் கார்டுகளை அசெம்பிள் செய்து, பேக்கேஜ் செய்து, சீரியலைஸ் செய்கிறார்கள். இருப்பினும், சில விற்பனையாளர்கள் தங்கள் நம்பகமான மூல சான்றிதழை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பழைய சிம் கார்டுகளை உடைத்தெறிந்துவிட்டு, நம்பகமான புதிய சிம் கார்டுக்கு மாற வாய்ப்பிருக்கிறது:
ஆரம்பத்தில், தங்கள் சிம் கார்டு சிப்கள் (SIM card chips) நம்பகமான சப்ளையர்களிடமிருந்து வாங்கப்பட்டதாகக் கூறி நம்பிக்கையை பெற்றுள்ளனர். பிறகு, அவர்கள் வழங்கிய சிம் கார்டுகளில் உள்ள சிப்களில் சீனாவை தலமாக கொண்ட நிறுவனத்திடம் இருந்து கலப்படம் செய்திருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், பயன்பாட்டில் உள்ள பல சிம் கார்டுகளில் உள்ள சிப்களில் உண்மையில் சீனாவை அடிப்படையாக கொண்ட சிப்கள் இருப்பதை NCSC உறுதி செய்துள்ளது.
இதனால், பாதுகாப்பு நலன் கருதி பயன்பாட்டில் உள்ள பழைய சிம் கார்டுகளை உடைத்தெறிந்துவிட்டு, நம்பகமான புதிய சிம் கார்டுக்கு மாற மக்கள் விரைவில் அறிவுரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதியை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்டால், மக்கள் தங்களின் பழைய சிம் கார்டுகளை கட்டாயம் (change old SIM cards) மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications