jio காட்டுல மழை: குவியும் முதலீடுகள்., சில்வர் லேக் கொடுத்த பெரிய தொகை!

|

சில்வர் லேக் தொழில்நுட்பம் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து ஜியோ நிறுவனத்துக்கு முதலீடு செய்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் பங்கை வாங்கியது

பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் பங்கை வாங்கியது

ஜியோவின் இந்த விற்பனை நடவடிக்கைகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் (RIL) இன் கடன் சுமையைக் கண்டிப்பாகக் குறைக்க உதவும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், பேஸ்புக் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய இந்தியச் சந்தையில் கால்பதித்து ஒரு உறுதியான இடத்தை பிடிக்க இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.

எத்தனை ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது

எத்தனை ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கிலிருந்து சுமார் 5.7 பில்லியன் டாலருக்கு மதிப்பிலான 9.9 சதவீத பங்கை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது, இந்திய மதிப்பின் படி இந்த ஒப்பந்தத்தின் விலை சரியாக 43,574 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?

மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு

மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு

இந்தியத் தொழில்நுட்ப துறையில் நடைபெறும் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு இந்த ஒப்பந்தம் என்று ஜியோ கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், "இந்த முதலீடு இந்தியா மீதான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் ஜியோவால் தூண்டப்பட்ட வியத்தகு மாற்றத்தால் ஏற்பட்ட எங்கள் உற்சாகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்பு

60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்பு

புதிய வழிகளில் மக்களை இணையும் ஜியோவுடன் இணைய நாங்கள் விரும்பி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளோம். பேஸ்புக் உதவி இந்தியாவில் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது எங்கள் இலக்கு" என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் வெறும் முதலீட்டு ஒப்பந்தம் இல்லை

இந்த ஒப்பந்தம் வெறும் முதலீட்டு ஒப்பந்தம் இல்லை

இந்த ஒப்பந்தம் வெறும் முதலீட்டு ஒப்பந்தமாக மட்டுமின்றி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பேஸ்புக்கின் வாட்ஸ்அப் சேவை ஆகிய சேவைகளை இணைத்து, வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஜியோமார்ட் வலைத்தளம் மூலம் புதிய அளவில் வணிகத்தை விரிவுபடுத்தி, சிறு வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சேர்த்து இந்த ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.

மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ச்சி

மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ச்சி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி இந்தியாவில் இதுவரை கண்டிடாத பெரும் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேக வளர்ச்சிக்கு காரணம்

அதிவேக வளர்ச்சிக்கு காரணம்

ஜியோவின் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் மக்களுக்கு இந்நிறுவனம் வழங்கிய இலவச வாய்ஸ கால் அழைப்பு, அளவில்லா இலவச டேட்டா, திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் இசை உள்ளிட்ட பல புதுமையான முயற்சிகள் மூலம் ஜியோ நிறுவனம் சுமார் 340 மில்லியன் வாடிக்கையாளர்களை தன வட்டத்திற்குள் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனம்

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ரூ.5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த முதலீட்டின் படி ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு 4.90 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மிகவும் குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.49 ஆயிரம் கோடி ஜியோவுக்கு கிடைத்துள்ளது.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி

இதுகுறித்து ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி, சில்வர் லேக் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றில் மிகவும் மதிக்கப்படும் குரல்களில் ஒன்றாகும். இந்திய டிஜிட்டல் சமுதாயத்தின் மாற்றத்திற்கான சில்வர்லேக் உலகளாவிய தொழில்நுட்ப உறவுகளின் நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Silver Lake has agreed to invest ₹5,655.75 crore in Jio Platforms Ltd!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X