டெலிகிராம் செயலியின் சைலன்ட் மெசேஜ் அம்சம்: அனுப்புவது எப்படி? இதனால் என்ன பயன்?

|

வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த நிலையில் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதிலும் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.

சிக்னல், டெலிகிராம்

மேலும்வாட்ஸ்அப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் எது சிறந்தது? எது பாதுகாப்பானது? போன்ற கேள்விகளும் தேடல்களும்அதற்கான பதில்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் எந்த செயலி சிறந்தது என மக்கள் கருத்துதெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ்அப் போலவே டெலிகிராம்

அதன்படி வாட்ஸ்அப் போலவே டெலிகிராம் செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதில் முக்கியமான அம்சம் சைலண்ட் மேசேஜ் ஆகும். இது பெயர் குறிப்பிடுவது போலவே அமைதியாக மேசஜ்களை அனுப்ப உதவுகிறது.

Mi 10T போன் மீது ரூ.3,000 பிரைஸ் கட்.. 'இந்த' வங்கி வாடிக்கையாளருக்கு இது டபுள்.. புதிய விலை என்ன தெரியுமா?Mi 10T போன் மீது ரூ.3,000 பிரைஸ் கட்.. 'இந்த' வங்கி வாடிக்கையாளருக்கு இது டபுள்.. புதிய விலை என்ன தெரியுமா?

மொபைலை சைலன்ஸ்

அதாவது பெறுநர் தனது மொபைலை சைலன்ஸ் மோட்-இல் வைத்திருந்தாலும் அல்லது சைலன்ஸ் மோட்-இல் வைத்திருக்கவிட்டாலும் கூட நீங்கள் அனுப்பும் மெசேஜ் ஆனது நோட்டிபிகேஷன் சவுண்ட் இல்லாமல் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ங்களின் நண்பருக்கு ஒரு

ஒரு உதாரணமாக. உங்களின் நண்பருக்கு ஒரு அவசர மெசேஜ் அனுப்ப வேண்டும். ஆனால் அவரோ ஒரு முக்கியமான மீட்டிங்க் அல்லது வேலையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மெசேஜை அனுப்பாமல் இருக்கவும் முடியாது அதேபோல் உங்களது நண்பரை தொந்தரவும் செய்ய கூடாது.

இந்தநிலையில் தான் டெலிகிராம் செயலியின் சைலன்ட் மெசேஜ் உங்களுக்கு உதவும். அதாவது சரியான நேரத்திற்கு மெஸேஜையும் அனுப்பி விடலாம் அதேசமயம் அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது.

செயலியில் உள்ள அ

இப்போது டெலிகிராம் செயலியில் உள்ள அந்த சைலன்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் நல்ல இணைய இணைப்பு மற்றும் டெலிகிராம் செயலியின் லேட்டஸ்ட் வெர்ஷன் தேவைப்படும்.

 வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து உங்களது கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள டெலிகிராம் செயலியை திறக்கவும்.

 வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் எந்தவொரு சாட் விண்டோவிற்கும் செல்லுங்கள், அதில் நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜைடைப் செய்யவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அதன்பின்னர் சென்ட் பட்டனை பட்டென்று அழுத்தி விடமால், சுமார் 3 விநாடிகள் லாங் பிரஸ் செய்யுங்கள்.

 வழிமுறை-5

வழிமுறை-5

3 விநாடிகள் லாங் பிரஸ் செய்தவுடன் உங்களுக்கு இரண்டு வருப்பங்கள் காண்பிக்கப்படும். அதில்
ஷெட்யூல் மெசேஜ் மற்றும் சைலன்ட் மெசேஜ்.

வழிமுறை-6

வழிமுறை-6

இப்போது சைலன்ட் மெசேஜ் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும், அவ்வளவுதான். அதேபோல்
நீங்கள் மெசேஜ் ஷெட்யூல் செய்யவும் விருப்பம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Silent Message Feature of Telegram app: How to send? : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X