ஏர்போர்டில் பிரச்சனையா! புகார் செய்ய புதிய அப்ளிக்கேஷன்!

Posted By: Staff
ஏர்போர்டில் பிரச்சனையா! புகார் செய்ய புதிய அப்ளிக்கேஷன்!

விமான நிலையத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு நேரடியாக தெரியப்படுத்த ஃப்ளை ரைட்ஸ் என்ற புதிய அப்ளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் சீக் குரூப்ஸ் அறிமுகம் செய்துள்ளனர்.

விமான நிலையங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால், அதை நேரடியாக அரசாங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க பயணிகளுக்கு ஃப்ளை ரைட்ஸ் என்ற அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பயணிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது முறைகேடாக நடத்தப்பட்டாலோ உடனடியாக அரசாங்க அதிகாரிகளுக்கு இந்த அப்ளிக்கேஷன் மூலம் எளிதாக தெரியப்படுத்தலாம்.  இந்த அப்ளிக்கேஷனை ஐபோன் மற்றும்

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல்களில் பயன்படுத்த முடியும். இன்று மொபைல்கள் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அந்த வகையில் இந்த அப்ளிக்கேஷனை ஐபோன்

மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கும் அனைவரும் பயன்படுத்த முடியும் என்பது ஒரு சிறப்பான

விஷயம் தான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot