உங்களின் தனியுரிமையை அரசாங்கம் கண்காணிக்கிறது: இதோ உண்மையான எவிடன்ஸ்.!

தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையில் பல முன்னேற்ற மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

|

தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையில் பல முன்னேற்ற மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், அதுபோல அதீத தொழில்நுட்ப வளர்ச்சி நமது தனியுரிமை பற்றிய கவலை மற்றும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உங்களின் தனியுரிமையை அரசாங்கம் கண்காணிக்கிறது: இதோ உண்மையான எவிடன்ஸ்.!

வெளிநாடுகளில் அரசாங்கம் மக்களைக் கண்காணிக்கிறது என்று சமீபத்திய செய்தி தகவல் வெளி ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் நமது இந்திய அரசாங்கமும் நம்மைக் கண்காணிக்கிறதா என்ற சந்தேகம் பலரது மனதில் தோன்றி மறைந்திருக்கும். அல்லது நாம் கண்காணிக்க படுவதை எப்படி அறிந்து கொள்வது என்ற முறை தெரியாமல், போனால் போகட்டும் என்று அலட்சியமாய் தோன்றிய சிந்தனையை உதறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றிருப்போம்.

நம்மை அரசாங்கம் அல்லது வேறு யாரும் கண்காணிக்கிறார்களா என்று அறிவதற்காரண எளிய வழிமுறைகளைக் கீழே தொகுத்திருக்கிறோம். படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் முடிந்த வரை உங்கள் தனி உரிமையைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

1. இரைச்சலான சத்தம்:

1. இரைச்சலான சத்தம்:

உங்கள் தொலைப்பேசி அழைப்பின் போது நீங்கள் வித்தியாசமான குரல்களை கேட்கிறீர்கள் அல்லது இரைச்சலான சத்தத்தை கேட்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களின் அழைப்புகளை யாரோ உங்களுக்குத் தெரியாமல் ஒட்டுக் கேட்கிறார் என்று தான் அர்த்தம். தொழிநுட்ப வளர்ச்சியினால் எளிதாய் வையர்டேப்பிங் மூலம் உங்களின் அழைப்புகளை ஒட்டுக் கேட்டு ரெகார்ட் செய்ய முடியும்.

2. சந்தேகத்திற்குரிய ஈமெயில்:

2. சந்தேகத்திற்குரிய ஈமெயில்:

நாம் அனைவருக்குமே சந்தேகத்திற்குரிய ஈமெயில்கள் நிச்சயம் இன்பாக்ஸ் இல் குவிந்திருக்கும். என்னுடைய முதல் கேள்வி நீங்கள் அதை துறந்துவிட்டீர்களா? என்பது தான். உங்களுக்கு வந்த சந்தேகத்திற்குரிய ஈமெயில்களை நீங்கள் ஓபன் செய்திருந்தால், உங்கள் மொபைல் போன் மற்றும் ஈமெயில் ஐடி இன்னொருவரின் பயன்பாட்டிற்கும் அனுமதி வழங்கிவிட்டது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

3. அதீத டேட்டா பயன்பாடு செய்தி:

3. அதீத டேட்டா பயன்பாடு செய்தி:

உங்களின் டேட்டா பயன்பாடு, நீங்கள் உண்மையில் பயன்படுத்துவதை விட அதிகமாக உள்ளது என்றால், உங்களுக்குத் தெரியாமல் உங்களின் தகவல்களை மூன்றாம் நபர் யாரோ பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். பயன்படுத்துவது மட்டுமில்லாமல் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு தவராக பயன்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது.

4. வெப்கேம் அபாயம்:

4. வெப்கேம் அபாயம்:

உங்கள் வெப்கேம் வித்தியாசமாய் செயல்படுகிறதா? உங்களின் வெப்கேம் நீங்கள் பயன்படுத்தாத நேரத்திலும் கூட பயன்பாட்டில் இருப்பது போன்று உங்களுக்குத் தோன்றுகிறதா? சரி உடனே உங்கள் வெப்கேம் ஐ சோதித்துப் பார்த்துவிடுங்கள். உங்கள் வெப்கேம் விளக்குகள் நீங்கள் பயன்படுத்தாத நேரத்திலும் கூட ஆன் இல் இருக்கிறது என்றால், எங்கோ ஒரு மூலையில் இருந்து யாரோ உங்களின் நடவடிக்கைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதே அதன் அர்த்தம்.

5. ஸ்மார்ட் டிவி அபாயம்:

5. ஸ்மார்ட் டிவி அபாயம்:

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை எளிதில் ஹேக் செய்யத் தெரிந்த ஹேக்கற்களுக்கு ஸ்மார்ட் டிவி மட்டும் என்ன கைக்குக்கிடைக்காத மாங்கனியா? அதுவும் அவர்களுக்கு எம்மாதிரம் தான். ஸ்மார்ட் டிவி இல் இருக்கும் மைக் மற்றும் கேமரா மூலம் உங்களின் நடவடிக்கைகளை நேரடியாக கவனிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். முடிந்த வரை டிவி முன்னாள் அமைதியாய் உக்காந்து படத்தை மட்டும் பாருங்கள்.

6. அதிக நேர ஆன்லைன் பயன்பாடு:

6. அதிக நேர ஆன்லைன் பயன்பாடு:

அதிக நேரம் ஆன்லைன் பயன்பாட்டில் இருப்பவரா நீங்கள்? அப்பக் கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க, உங்கள் ஆன்லைன் செயல்பாடு நெருக்கமாகக் கண்காணிக்கப்படாது என நீங்கள் நினைக்கலாம், ஆனால் அரசாங்கம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக அனைவரையும் கண்காணிக்கிறது. அரசியல், கருத்தியல், மத, சமூக அல்லது பொருளாதார இலக்குகளை அடைவதற்கு வன்முறை செயல்களின் ஊக்குவிப்பை ஊக்குவிப்பது, சமூக வன்முறை சர்ச்சைகளுக்கு ஒத்துழைத்தல், அதை நியாயப்படுத்துதல் அல்லது ஆதரவளித்தல் போன்ற செயல்களை நீங்கச் செய்தால் நிச்சயம் அரசாங்கம் உங்களைக் கண்காணிக்க கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

7. அப்டேட் அபாயம்:

7. அப்டேட் அபாயம்:

உங்களின் அடிப்படை இணையச் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ள வேண்டும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் சாதனங்களைப் சரியாக அப்டேட் செய்து புதுப்பித்துக்கொள்வது தான். காலாவதியான அப்டேட் கொண்ட சாதனத்தை ஹேக் செய்யும் வாய்ப்பு அதிகம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து உங்களுக்கு அப்டேட் அறிவிப்பு வந்தால் யோசிக்காமல் உடனே அப்டேட் செய்து உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள்.

8. குக்கீஸ்:

8. குக்கீஸ்:

குறுந்தகவலாக சேமிக்கப் படும் இந்த குக்கீஸ்கள் உங்களின் ப்ரோவ்ஸர் பயன்பாடு மற்றும் உங்களின் பாஸ்வோர்டு என இணையத்தின் வழி நீங்கள் செய்யும் அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைக்கிறது. இந்த குக்கீஸ்களை பற்றிய அபாயகரமான விஷயம் என்னவென்றால் இந்தத் தகவல்கள் எளிதில் திருடப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது என்பது தான். இந்த குக்கீஸ்களை அணுகுவதற்கு அரசாங்கத்திற்கு முழு அனுமதி இருக்கிறது மக்களே.

 தனி உரிமைக்குப் பாதுகாப்பு இல்லை

தனி உரிமைக்குப் பாதுகாப்பு இல்லை

அரசாங்கம் ஏன் உங்களைக் கண்காணிக்க வேண்டும்? அரசாங்கம் அனைவரையும் கண்காணிக்கிறது என்று சொல்லி விட முடியாது, சமூகத்திற்கு இடைஞ்சல் கொடுக்கும் அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நபர்களை அரசாங்கம் நிச்சயம் கண்காணித்து வருகிறது அதுதான் உண்மை. நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்கள் இந்த நடவடிக்கைகளை நமக்கே தெரியாமல் செய்கிறார்கள். நாம் சமுதாயத்தில் நல்லவர்களாய் இருந்து விட்டால் நம்மை அரசாங்கம் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இந்த டிஜிட்டல் உலகில் நமது தனி உரிமைக்குப் பாதுகாப்பு இல்லை என்பது மட்டுமே நிதசனமான உண்மை.

Best Mobiles in India

English summary
Signs the Government Is Spying on You : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X