வாட்ஸ்அப் நடவடிக்கையால் பாகுபலி போல டிரெண்ட் ஆகும் சிக்னல் ஆப்.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

வாட்ஸ்அப்பின்

அதாவது வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தணை என அனைத்து வாட்ஸ்அப் சர்வரில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப்பில்

அதேபோல் பயனாளர்கள் குறித்த விவரங்களை திரட்டி பேஸ்புக் வாயிலாக பிற தொழில் நிறுவனங்களுக்கும் வழங்குவதும் இதன் பின்னணியில் உள்ளது. வெளிவந்த தகவலின்படி, வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்கள் 30 நாட்களுக்கு அதன் சர்வர்களில் சேமித்து வைக்கப்படும்.

CES 2021 நிகழ்வில் புதிய நியோ QLED முதல் மினி LED டிவி வரை இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?CES 2021 நிகழ்வில் புதிய நியோ QLED முதல் மினி LED டிவி வரை இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

20 கோடிக்கும் அதிகமான மக்கள்

இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர், இந்த 20 கோடி பேரின் விவரங்களையும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்தால் கோடிக்கணக்கில் பணம் கொட்டும். அதாவது இந்த நிறுவனங்கள் அதற்கு ஏற்றவாறு விளம்பரங்களை வடிவமைத்து மக்களை கவரும். இதே பாணியை தான் ஏற்கனவே பேஸ்புக்கும் பின்பற்றி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

நிபந்தனைகளை ஒ

குறிப்பாக புதிய நிபந்தனைகளை ஒப்புக் கொண்டால் தொடர்ந்து வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தலாம், நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் அந்த வாட்ஸ்ஆப் கணக்கு நீக்கப்பட்டு விடும்.

டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும்

இந்த நிலையில் வாட்ஸ்அப் விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இந்த சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

வெளிவந்த தகவலின்படி, சிக்னல்

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, சிக்னல் செயலி ஆனது இந்தியா, ஆஸ்த்ரியா,பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல் அதிகப்படியான டவுன்லோட்களில் சிக்னல் செயலியின் சர்வெர்கள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சைன்-இன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவலை சிக்னல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Signal and Telegram are trending due to WhatsApp activity: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X