கூச்ச சுவாவமுடைய கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை: நினைவு கூறும் ஐஐடி பேராசிரியர்.!

வகுப்பில் மிகவும் கூச்சமான, அமைதியான அதேநேரம் அதீத புத்திசாலியான மாணவர்"என இந்த இரண்டு போராசியர்களும் அவரை நினைவு கூறுகின்றனர். "அவர் தைரியமில்லாதவர் அல்ல. வெறும் அதிக கவனம் செலுத்துபவர். அவர் எப்போது

By Lekhaka
|

2013 ஆம் ஆண்டின் ஒரு நாளின் பின்னிரவில் போராசிரியர் சனத் குமார் ராயின் போன் அலறி அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. அமெரிக்காவில் இருந்து அழைத்த ஒரு பத்திரிகையாளர், சனத்தின் முன்னாள் மாணவர் ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கூச்ச சுவாவமுடைய கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை:

"சில கேள்விகளை கேட்ட பிறகே, அவர்கள் கூறும் கூகுளின் மூத்த துணைத்தலைவர் என கூறும் சுந்தர் பிச்சை எனும் அந்த நபர் எனது முன்னாள் மாணவர் பிச்சை சுந்தர்ராஜன் என தெரிந்தது" என்கிறார் ஓய்வுபெற்ற கரக்பூர் ஐஐடி போராசியாரான அவர்.

உலோக பொறியாளர் பட்டம்:

உலோக பொறியாளர் பட்டம்:

இப்படி தான் தனது பிரபல முன்னாள் மாணவரும், தற்போதைய கூகுள் சி.ஈ.ஓ வான சுந்தர் பிச்சையை நினைவுகொள்கிறது ஐஐடி கரக்பூர். 25 ஆண்டுகளுக்கு முன்பு 1993ல் அங்கு உலோக பொறியியல் துறையில் பட்டம் பெற்றார் சுந்தர். அத்துறையின் சுவரில் மாற்றியுள்ள டாப்பர்கள் பட்டியலில் அவரது பெயரை காணமுடிகிறது. சுந்தர் பிச்சையின் பி.டெக் ஆய்வறிக்கைக்கான வழிகாட்டியான இந்திராணில் மன்னா, அவரது ஆய்வறிக்கையின் பிரதியை வைத்துள்ளார்.

கூச்சமும், அமைதியும் உள்ளவர்:

கூச்சமும், அமைதியும் உள்ளவர்:

"வகுப்பில் மிகவும் கூச்சமான, அமைதியான அதேநேரம் அதீத புத்திசாலியான மாணவர்"என இந்த இரண்டு போராசியர்களும் அவரை நினைவு கூறுகின்றனர். "அவர் தைரியமில்லாதவர் அல்ல. வெறும் அதிக கவனம் செலுத்துபவர். அவர் எப்போது எதைக்கேட்டாலும், அது அவருக்கு வேண்டப்பட்டதாக இருக்காது. அவர் எப்போதும் பல்வேறு மாணவர் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவார், அதிலும் குறிப்பாத துறைக்கு உள்ளே" என்கிறார் மன்னா.

கல்லூரியில் தாடி வளர்க்காத சுந்தர் பிச்சை:

கல்லூரியில் தாடி வளர்க்காத சுந்தர் பிச்சை:

அவருடைய பெரிய கையெழுத்தையும் நினைவு கூறும் மன்னா," அவர் ஒரு கூகுளின் சி.ஈ.ஓ வாக வருவார் உங்களுக்கு அப்போது தெரியுமா என இன்று நீங்கள் கேட்டால், அவர் கண்டிப்பாக ஒரு தலைவராக இருப்பார் என கூறுவேன். அவர் மிகவும் பிரகாசமானவர் மற்றும் கண்களில் நட்சத்திரம் உள்ளவர்" என நினைவுகளை பகிர்கிறார்.


சுந்தர் பிச்சை ஸ்டேன்போர்டில் முதுகலை படித்துமுடிக்கும் வரை முன்னா அவருடன் தொடர்பில் இருந்தார். "அவர் பி.ஹெச்டி படிப்பார் என எதிர்பார்த்தேன். எனது நினைவு சரியாக இருந்தால், இங்கு இருக்கும் போது அவர் தாடி வைத்திருக்கவில்லை. அதை தவிர்த்து, வேறு எந்த மாற்றமும் அவரிடம் இல்லை" என்கிறார் முன்னா.

கூகுள் சிஈஓ:

கூகுள் சிஈஓ:

கடந்த சில ஆண்டுகளாக சுந்தர் பிச்சையுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார் முன்னா. அவர் கூகுள் சி.ஈ.ஓவாக பொறுப்பேற்ற பிறகு தான் அவரை தொடர்புகொண்டார் முன்னா. "அவருடன் படித்த மற்றொரு முன்னாள் மாணவரை சந்தித்தபோது சுந்தரைப்பற்றி விசாரித்தேன். அவர் தான் சுந்தரை தொடர்புகொள்ளுமாறும், கண்டிப்பாக பதிலளிப்பார் எனவும் ஊக்குவித்தார். அப்போது நான் கான்பூர் ஐஐடியில் இருந்தேன் மற்றும் மாணவர்களும் ஏதேனும் ஒரு நிகழ்வில் அவரை சந்திக்க ஆர்வமாக இருந்தனர். சுந்தர் எனது மின்னஞ்சலுக்கு பதிலளித்த நிலையிலும், கேம்பஸ் வருவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை" என சிரிக்கிறார் முன்னா.

கடந்த வருடம் முன்னா ஐஐடி கரக்பூரில் இல்லாத போது, அங்கு சென்றார் சுந்தர் பிச்சை. ஆனாலும் அவர் மாணவராக இருந்தபோது தங்கியிருந்த நேரு ஹால் ஆப் ரிசிடென்ஸ் அவரின் வருகையை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்.

Best Mobiles in India

English summary
Shy intelligent student with big handwriting IIT professors remember Google CEO Sundar Pichai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X