Laptop-ஐ ஷட்டவுன் செய்வது நல்லதா? இல்லை ஸ்லீப் மோடில் வைப்பது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.!
இன்றைய காலகட்டத்தில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் என்று அனைவரும் லேப்டாப் (Laptop) பயன்படுத்துகின்றனர். சுலபமாக தேவைப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் சென்று வேலை பார்த்தல், கையாள்வதில் எளிமை என்று பல காரணிகள் லேப்டாப்பை இன்று மக்கள் மத்தியில் அத்தியாவசிய பொருளாக மாற்றி உள்ளது.
அப்படி லேப்டாப் பயன்படுத்தும் சிலர், அதில் உள்ள வேலை முடிந்த பிறகு, அதனை ஷட்டவுன் (Shutdown) செய்யாமல் நேரடியாக மூடி ஸ்லீப் மோடில் (Sleep Mode) வைப்பதை நாம் கவனித்திருப்போம். சிலர் முறையாக ஷட்டவுன் செய்து LED-க்கள் அடைந்த பின்னரே ஸ்கிரீனை மூடும் பழக்கத்தைப் பின்பற்றுவார்கள் இந்த இரண்டில் எது சரியானது? எந்த முறையை பின்பற்றினால் லேப்டாப்பின் ஆயுளை அதிகரிக்கலாம்?

லேப்டாப்பை ஷட்டவுன் செய்வது நல்லதா? அல்லது.. ஸ்லீப் மோடில் வைப்பது நல்லதா?
முறையாக ஷட்டவுன் செய்யாமல் நேரடியாக ஸ்கிரீனை மூடுவதால், லேப்டாப்பிற்கு பாதிப்பு ஏதாவது வருமா? என்ற கேள்விகள் அனைவருக்குள்ளும் இருக்கும். அதற்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அதற்கு முன் ஸ்லீப் மோட் என்றால் என்ன? ஷட்டவுன் மோட் என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
லேப்டாப்பை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருக்கும்போது அதன் திரை தானாக பிளாங்க் (Blank) ஆகிவிடும். இதனை ஸ்லீப் மோட் என்று கூறுவோம். இந்த மோடில் திரை பிளாங்க் ஆகுமே தவிர மற்ற பாகங்கள் செயல்பாட்டில் தான் இருக்கும். ஆனால், லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது தேவைப்படும் பவரைவிட, ஸ்லீப் மோடில் இருக்கும்போது குறைவான பவரே உள்ளிழுக்கப்படும்.
இதுவே, ஷட்டவுன் மோட் என்றால், லேப்டாப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் முற்றிலுமாக நிறுத்திவிடும். ஒரு லேப்டாப் ஷட்டவுன் செய்யப்பட்ட பின்னர், அதில் எந்த பாகமும் செயல்படாது. மீண்டும் ஸ்விட்ச் ஆன் (Switchon) செய்யும்பொழுது தான் மீண்டும் லேப்டாப் இயங்கும். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இப்போது இந்த இரண்டு மோடில் எது சிறந்தது? மற்றும் எது பாதுகாப்பானது என்று பார்ப்போமா?

நம்மில் அதிகமானோர் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் 'இந்த' பழக்கம்.! லேப்டாப்பிற்கு விபரீதம் ஆகலாம்!
அதிகமாக லேப்டாப் பயன்படுத்துபவர்கள், ஒவ்வொரு முறை வேறு வேலைக்கு செல்லும் போதும் லேப்டாப்பை சுவிட்ச்ஆஃப் (Switch Off) செய்ய வேண்டும் என்றால், பயன்பாட்டில் இருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் (Applications) க்ளோஸ் (Close) செய்துவிட்டுத் தான் ஷட்டவுன் செய்ய முடியும். எனவே ஷட்டவுன் தேர்வை பயன்படுத்தும்போது விட்ட இடத்திலிருந்து வேலையை ஆரம்பிக்க முடியாது. இதனால் நேரம் அதிகமாக விரயமாகும்.
அவசரமாக ஒரு வேலைக்கு செல்லும் போது லேப்டாப்பை மூடி வைத்துவிட்டுச் சென்றால், அந்த சமயத்தில் பயன்பாட்டில் இருக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் லேப்டாப்பின் டெம்ப்ரவரி மெமரி (Temporary Memory) என்று கூறப்படும் RAM-ல் தற்காலிகமாகச் சேகரிக்கப்பட்டு விடும். மீண்டும் ஸ்கிரீன் ஓப்பன் ஆகும் பொழுது, எந்த இடத்தில் நாம் பயன்பாட்டை விட்டு சென்றோமோ அங்கிருந்தே வேலையை தொடரலாம்.
அதேபோல, ஷட்டவுனிலிருந்து லேப்டாப்பை உயிர்பிக்க செய்வதைவிட ஸ்லீப்பிலிருந்து தட்டி எழுப்பக் குறைந்த பவரும், குறைந்த நேரமும் மட்டுமே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ, ஷட்டவுனில் எந்த சாதகமும் இல்லையா என்று யோசிக்க வேண்டாம். ஸ்லீப் மோடில் இருக்கும் போது லேப்டாப் செயல்பாட்டிலேயே இருக்கும் என்பதால் அதிலிருக்கும் நுண்ணிய எலக்ட்ரானிக் பாகங்கள் தொடர்ச்சியாக வெப்பத்தை எதிர்கொண்டு இருக்கும்.

லேப்டாப்பை OFF செய்து பயன்படுத்தலாமா? எது சரியான முறை? எது பாதுகாப்பானது?
இது அதிக காலம் நீடிக்கும் போது சீக்கிரமாக அவை பாழடையும் அல்லது பழுதடைய வாய்ப்புள்ளது. இதனால் லேப்டாப் செயலிழந்து போக நேரலாம். இதுவே நாம் லேப்டாப்பை ஷட்டவுன் செய்யும் பொழுது, எலக்ட்ரானிக் பாகங்கள் பழுதடைவது குறையும். இதனால், லேப்டாப்பின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல, ஷட்டவுன் செய்வதிலிருக்கும் மற்றொரு ஆதாயம், தேவை இல்லாமல் கரண்ட் இழுக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
என்ன தான் லேப்டாப் ஸ்லீப் மோடில் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க, குறைந்த அளவான பவர் தேவைப்படுகிறது. ஆனால், ஷட்டவுன் செய்துவிட்டால் லேப்டாப் செயல்பாட்டிலேயே இருக்காது. அதனால் கரண்ட் செலவு இருக்காது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தொடர்ச்சியாக லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஸ்லீப் மோட் தான் சிறந்தது.
காரணம், வேலையை மீண்டும் தொடர இது மிகவும் பயனுள்ளதாகத் திகழ்கிறது. ஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது லேப்டாப்பை ஷட்டவுன் செய்து அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். மேலும், பயணம் செய்யும்போது லேப்டாப்பை ஸ்லீப் மோடில் வைப்பதை விட, ஷட்டவுன் செய்வதே நல்லது. லேப்டாப்பை ஆனில் வைத்தே பயணம் செய்யும்போது செயல்பாட்டிலிருக்கும் ஹார்ட் டிஸ்க் (Hard Disk) பயணத்தின் அதிர்வுகள் மூலம் சுலபமாகச் சேதமடையலாம்.
எனவே நீங்கள் அதிகதூரம் பயணம் செய்ய நேர்ந்தால் லேப்டாப்பை ஷட்டவுன் செய்து எடுத்துச் செல்வது நல்லது.


Click it and Unblock the Notifications