ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு பற்றிய கவலையா? குறைப்பது எப்படி.?

|

ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு கடந்த சில ஆண்டுகளாக முக்கிய விவாதப் புள்ளியாக உள்ளது. கதிர்வீச்சின் சேத விளைவுகள் நன்கு அறியப்பட்டவையாக இருந்தாலும், இன்னும் ஸ்மார்ட்போன்கள் நம் எல்லோருடைய வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.

எவ்வளவு மோசமானது?

எவ்வளவு மோசமானது?

பயனர்கள் ஸ்மார்ட்போனில் பேசும் போது அதன் கதிர்வீச்சு நேரடியாக மனிதர்களை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு மோசமானது?

 மின்காந்த அலைகளை வெளியிட துவங்குகிறது

மின்காந்த அலைகளை வெளியிட துவங்குகிறது

ஸ்மார்ட்போன்-ஐ ஆன் செய்யும்போது அது மின்காந்த அலைகளை வெளியிட துவங்குகிறது. இதன்மூலம் தான் போன்கள் சிக்னல்களை அனுப்புகின்றன. ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு என்பது போன் வெளியிடும் மின்காந்த அலைகளில் இருந்து உங்கள் உடல் எவ்வளவு ஆற்றலை உட்கொள்கிறது என்ற அளவை பொருத்தது ஆகும்.

ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகும் ஜிகா ஃபைபர்.!ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகும் ஜிகா ஃபைபர்.!

அரசாங்கத்தின் தரவுகளின் படி

அரசாங்கத்தின் தரவுகளின் படி

ஒரு ஸ்மார்ட்போன் வெளியிடும் கதிர்வீச்சு அளவு, குறிப்பிட்ட உட்கொள்ளும் விகிதம்( Specific Absorption Rate) அல்லது சுருக்கமாக எஸ்ஏஆர் என்ற குறியீட்டில் அளவிடப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் தரவுகளின் படி, 1 கிலோ கிராமிற்கு 1.6 வாட்ஸ் (1.6 W / KG) மற்றும் அதற்கு கீழே எஸ்ஏஆர் விகிதம் கொண்ட எந்தவொரு மொபைல்போனும் பயன்படுத்த பாதுகாப்பானதாகும்.

புற்றுநோய்க்கும் வழிவகுக்கும்

புற்றுநோய்க்கும் வழிவகுக்கும்

எனினும் கதிர்வீச்சு வரும் போது, எப்போதும் நமக்கு வெளிப்படையாக தெரிவதை காட்டிலும் இன்னும் நிறைய இருக்கிறது.

அயனியாக்க கதிர்வீச்சு உடலின் அணுக்களிலிருந்து எலக்ட்ரான்களைப் புறக்கணிக்க போதுமான சக்திவாய்ந்ததாக இருப்பதால், இது உடலின் உட்செல்கள் சேதப்படுத்துவது மட்டுமில்லாமல் நேரடியாக புற்றுநோய்க்கும் வழிவகுக்கும். ஆனால் ஸ்மார்ட்போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கும் அயனியாக்க கதிர்வீச்சுக்கு நெருங்கிய தொடர்பு இல்லை. எனவே நீங்கள் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சைப் பற்றி கேள்விப்படும் போது, நீங்கள் செய்ய வேண்டிய கடைசி விஷயம் புற்றுநோயை பற்றி யோசிப்பது. ஆனால் சில விஷயங்கள் கவனத்தில் வைப்பது அவசியமாகிறது.

பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா? அப்போ இதை படிங்க!பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா? அப்போ இதை படிங்க!

5G அலைகள் மிக அதிகமாக இருக்கக்கூடும்

5G அலைகள் மிக அதிகமாக இருக்கக்கூடும்

4G அலைகளை காட்டிலும் 5G அலைகள் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் அவற்றை தீவிரமாக கவனிக்கவேண்டியது அவசியமாகிறது. ஆனால் மீண்டும் இவையும் அயனியாக்க கதிர்வீச்சுக்கு நெருக்கமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஸ்மார்ட்போனில் இருந்து உங்கள் மண்டை ஓட்டில் கதிரியக்க அலைகள் செலுத்தாதவரையில், உங்கள் உடலை பாதிக்குமளவிற்கு அவை போதுமான சக்திவாய்ந்ததாக கருதப்படுவதில்லை.

அதிகரித்துக்கொண்டே செல்கின்றன

அதிகரித்துக்கொண்டே செல்கின்றன

இதுதொடர்பாக நடத்தப்படும் ஒவ்வொரு ஆய்வின் முடிவுகளும் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு உண்மையில் நமக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது என்றே கூறிவருகின்றன. ஆனால் ஸ்மார்ட்போன் தளமானது 5G உடன் விரைவான வேகத்தில் வளர்ந்துவருவதால், ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கையும் மற்றும் ஸ்மார்ட்போனில் செலவழிக்கப்படும் சராசரி நேரமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்த காரணிகளினால் ஒரு வலுவான ஆய்வை நடத்துவது சாத்தியமில்லாமல் உள்ளது.

அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.!அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.!

நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்..

நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்..

ஆனால் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு வெளிப்பாட்டை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை பின்வருமாறு.

* ரேடியேசன் பிளாக்கர் சாதனங்களை பயன்படுத்தலாம்.

* தூங்கும் போது உங்கள் தொலைபேசியை அணைத்து வைக்கலாம்.

*பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போன் உங்களிடம் இருந்து தள்ளி இருக்கும் வகையில், கைப்பை/பின்புற பைகளில் வைக்கலாம்.

* அழைப்புகள் மேற்கொள்ளும் போது போதுமான வரை ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
should-you-worry-about-smartphone-radiation-how-to-limit-your-exposure: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X