ஜி மெயில் ஷாட்கட் கீக்கள்!!!

By Keerthi
|

இன்று உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தும் மெயில் எது என்றால் அது ஜி-மெயில் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், ஜி-மெயிலில் மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன இவை ஜி-மெயிலின் ஷாட் கட் கீக்கள் ஆகும்.

முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.

Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.

/

k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.

j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு - இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.

6. n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்.

p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்.

o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஜி மெயில் ஷாட்கட் கீக்கள்!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்.

s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது.

!:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது.

r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்.

a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும் ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய விண்டோவில் உருவாக்கப்படும்.

f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத்தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும்.

: கர்சர் ஏதேனும் இன்புட் பீல்டில் இருந்தால், அதிலிருந்து அதனை வெளியே கொண்டு வரும்.

+ s: ஒரு மெசேஜ் கம்போஸ் செய்கையில் அப்போதைய டெக்ஸ்ட்டை ஒரு ட்ராப்ட்டாக சேவ் செய்திடும். இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்துகையில், கர்சர் மெசேஜ் விண்டோவினுள் இருக்க வேண்டும். மெசேஜ் அமைக்கும் கட்டம் To, CC, BCC, அல்லது Subject ஆகிய பீல்டுகளில் ஒன்றில் இருக்க வேண்டும்.

# (Delete): குறிப்பிட்டவையை அழிக்கும்.

l (label): லேபிள் கான்வெர்சேஷன் மெனுவைத் திறக்கும். இதன் மூலம் கான்வெர்சேஷன் ஒன்றுக்கு லேபிள் கொடுக்கலாம்.

v (Move to): இன்பாக்ஸிலிருந்து கான்வெர்சேஷன் ஒன்றை லேபிள், ஸ்பாம் அல்லது ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்பும்.

+ i: மெசேஜ் ஒன்றை படித்ததாக (Read) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.

+ u: மெசேஜ் ஒன்றை படிக்காததாக (Unread) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.

[: ஆர்க்கிவ் அனுப்பி முந்தைய மெசேஜுக்குச் செல்ல

]: ஆர்க்கிவ் அனுப்பி அடுத்த மெசேஜுக்குச் செல்ல

25. z: அதற்கு முன் மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்குகிறது.

+ n: புதிய மெசேஜ் வந்திருந்தால் உங்கள் கான்வெர்சேஷனை அப்டேட் செய்திடும்.

q: கர்சரை சேட் சர்ச் பாக்ஸுக்குக் கொண்டு செல்லும்.

y: தற்போதைய வியூவிலிருந்து மெசேஜ் அல்லது கான்வர்சேஷனை மாற்றும். அதாவது இன்பாக்ஸில் இருந்தபடி இதனைக் கொடுத்தால், ஆர்க்கிவ் கொண்டு செல்லும். ஸ்டார்டு பட்டியலில் இருந்தபடி கொடுத்தால், ஸ்டார் நீக்கும். ட்ரேஷ் பாக்ஸில் இருந்தபடி கொடுத்தால், இன்பாக்ஸ் கொண்டு செல்லும். ஏதேனும் லேபிள் கீழாக உள்ள மெசேஜுக்கு இதனைக் கொடுத்தால், அந்த லேபிளை மெசேஜிலிருந்து நீக்கும்.

(.) :புள்ளி அடையாளம்: ‘More Actions' ட்ராப் டவுண் மெனுவினைக் கொடுக்கும்.

?:கீ போர்டு ஷார்ட் கட் மெனுவினைக் கொடுக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X