ஏர்செல் அழிந்தது எப்படி.? அம்பானியின் நிஜமான திட்டம் என்ன.? அம்பலப்படுத்திய BSNL அதிகாரி.!

|

ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, குறிப்பாக இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். மேலும் ஜியோவின் முதல் குறிக்கோள் தனக்கு லாபாம் வரவில்லை என்றால் கூட பரவயில்லை ஆனால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு லாபாம் வரக்கூடாது என்பதாகும்.

ஜியோ வருகையால் மற்ற தொலைதொடர்பு துறைக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகள்.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை மலிவு விலையில் அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வங்கியில் கடன்பெற்று தனது சேவைகளை நடத்தி வருகிறது, இதனிடையில் ஜியோ அறிவிக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகள் மூலம் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் நிலைமை உள்ளது.

புகார்:

புகார்:

சிஒஏஐ(Cellular Operators Association of India) என்ற அமைப்பு ஒன்று உள்ளது, இந்த அமைப்பு தொடர்ந்து ஜியோ நிறுவனத்தின் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் சில விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை என சிஒஏஐ சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல்:

ஏர்செல்:

ஏர்செல் நிறுவனம் காணமல் போனதற்கு முக்கிய காரணம் இந்த ஜியோ நிறுவனம் தான், ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து
ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமாக சிக்னல் கோபுரங்கள் இருக்கிறது, மேலும் கேபிள், எக்சேஞ்ச் மற்றும் சிறந்த பணியாளர்களை கொண்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்கு சொந்தமாக சிக்னல் கோபுரங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது, ஏர்செல் வைத்திருக்கும் சிக்னல் கோபுரங்கள் அனைத்தும் வாடகை முறையில் செயல்பாட்டில் இருந்தது, தொடர்ந்து ஏர்செல் நிறுவனம் சிக்னல் கோபுரங்களுக்கு (டவர்) வாடகை கொடுக்க முடியாததால் சேவை துண்டிக்கப்பட்டது.

சிக்னல் கோபுரங்கள்:

சிக்னல் கோபுரங்கள்:

சிக்னல் கோபுரங்கள் பொறுத்தவரை தொலைதொடர்பு துறைக்கு உயிர் போன்றது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில்
உள்ள அனைத்து இடங்களிலும் சிக்னல் கோபுரங்களை கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ
இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான சிக்னல் கோபுரங்களை பணம் கொடுத்து பயன்படுத்தி வருகிறது. தொடர்ந்து
பிஎஸ்என்எல் சேவை முடக்க குறிவைத்துள்ளது ஜியோ நிறுவனம்.

தொலைதொடர்பு நிறுவனங்கள்:

தொலைதொடர்பு நிறுவனங்கள்:

ஜியோ நிறுவனம் தொடர்ந்து லாபம் இல்லமால் பல்வேறு திட்டங்களையும் மற்றும் சலுகைகளையும் அறிவிப்பதற்கு முக்கிய காரணம் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை ஒழிப்பதற்கு தான். குறிப்பாக மற்ற தொலைதொடர்பு துறைகள் ஒழிந்தால் அந்த சமயம் விலை உயர்ந்த திட்டத்தை கொண்டுவர காத்திருக்கிறது ஜியோ நிறுவனம்.

How to check PF Balance in online (TAMIL)
 வளர்ச்சி:

வளர்ச்சி:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக போனதற்கும் பின்பு விரிவாக்கம் மற்றும் வளர்சி போன்றவைக்கு தடையாக உள்ளது
ஜியோ நிறுவனம். தொடர்ந்து ஜியோ நிறுவனம் பல்வேறு சேவைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.

 மதிவாணன்:

மதிவாணன்:

மேலும் ஜியோ வருகையால் மற்ற தொலைதொடர்பு துறைக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகளை பிஎஸ்என்எல் அதிகாரி பிஎஸ்என்எல் அதிகாரி
சிகே.மதிவாணன் தெள்ள தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மூலம் -newsglitz

Best Mobiles in India

English summary
Shocking Truth about Reliance JIO Network; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X