Home
News

மிரள வைக்கும் மிலிட்டரி தொழில்நுட்பங்கள்..!!

By Meganathan

தொழில்நுட்ப வளரச்சியில் உலக நாடுகள் கடுமையான போட்டி போடும் நிலையில் உலகின் வல்லரசு நாடுகள் ராணுவ தொழில்நுட்பங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன. உலக நாடுகள் என்ன தான் சமாதான வழியை பின்பற்றுவதாக தெரிவித்தாலும் ஒவ்வொரு நாடும் தன்னை தற்காத்து கொள்ள உதவும் மிகவும் அபாயகரமான ஆயுத தொழில்நுட்பங்களை தயாரித்து வருகின்றது தான் உண்மை..

உலகின் தலைசிறந்த ராணுவ படைகளில் மேம்படுத்தப்பட்டுள்ள சில மிரள வைக்கும் தொழில்நுட்பங்களின் விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் காணத்தவறாதீர்கள்...

வியரபிள் ரோபோட்

வியரபிள் ரோபோட்

அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் டார்பா (டிஃபென்ஸ் அட்வான்ஸ்டு ரிசர்ச் ப்ராஜக்ட் ஏஜென்ஸி) 2014 ஆம் ஆண்டு வியரபிள் ரோபோட்களை கண்டறிந்தது.

எடை

எடை

இந்த ரோபோட் ஆடையானது அணிபவரை அதிக எடையை தூக்கி கொண்டு வேகமாக நடக்க உதவியாக இருக்கும். இவை எக்சோஸ்கெலிட்டன் என அழைக்கப்படுகின்றது.

ஸ்மார்ட் புல்லட்

ஸ்மார்ட் புல்லட்

இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட தோட்டாக்களை கண்டறிவது தான் ஸ்மார்ட் புல்லட் திட்டத்தின் நோக்கமாகும், இதுவும் டார்பா உருவாக்கும் தொழில்நுட்பம் தான்.

துல்லியம்

துல்லியம்

ஸ்மார்ட் புல்லட்கள் நகரும் இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை.

ஃபான்டம் ஐ டிரோன்

ஃபான்டம் ஐ டிரோன்

போயிங் தயாரித்த ஃபான்டம் ஐ டிரோன் ஹைட்ரஜன் நிரப்பட்ட விமானம் ஆகும், இது 450 பவுன்டு எடையை சுமார் 65,000 அடி உயரத்தில் நான்கு நாட்களுக்கு தாங்கும் திறன் கொண்டது. சமீபத்தில் போயிங் அறிமுகம் செய்த விமானம் சுமார் 2000 பவுன்டு எடையை அதிகபட்சம் பத்து நாட்கள் வரை தாங்கும் என தெரிவிக்கப்பட்டது.

உளவு

உளவு

இந்த விமானங்கள் பொதுவாக உளவு பார்த்தல் மற்றும் தகவல் தொலைதொடர்பு போன்றவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஃப்ளை பை வயர்

ஃப்ளை பை வயர்

இந்த தொழில்நுட்பம் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைக்க உதவியாக இருக்கின்றது.

மின்கம்பி

மின்கம்பி

இங்கு விமானியின் தகவல்கள் அனைத்தும் மின்கம்பியின் மூலம் விமானத்திற்கு அனுப்பப்படுவகின்றது. விமானத்தின் இயக்க கருவிகள் அனைத்தும் எடை குறைவாக இருப்பதால் இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படுகின்றது.

எலக்ட்ரிக் வார்ஃபேர்

எலக்ட்ரிக் வார்ஃபேர்

தகவல் தொலைடர்புகளை துண்டிப்பது தான் போரில் வெல்ல எளிய வழி ஆகும். எதிரியின் தகவல் தொலைதொடர்புகளை துண்டிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ராணுவம் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Shocking Technology advancements in military warfare. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X