தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!

|

உங்களில் சிலருக்கு வி. ஏ. சிவா அய்யாதுரை (V. A. Shiva Ayyadurai) பற்றிய அறிமுகம் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் சிலருக்கு இமெயிலை கண்டுபிடித்தது ஒரு தமிழர் என்பது பற்றியும், அந்த தமிழர் - சிவா அய்யாதுரை தான் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கலாம்!

ஆம்! தனது 14-வது வயதில் இமெயிலை கண்டுபிடித்தவர் (Inventor Of Email) என்கிற பெயருக்கு சொந்தக்காரர் ஆன வி. ஏ. சிவா அய்யாதுரைக்கு தற்போது வயது 59 ஆகும்.

Twitter சிஇஓ நாற்காலியில் அமரும் அய்யாதுரை?

Twitter சிஇஓ நாற்காலியில் அமரும் அய்யாதுரை?

தமிழ்நாட்டில் பிறந்து இருந்தாலும் கூட, 7 வயதிலேயே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அங்கேயே 'செட்டில்' ஆகிவிட்ட சிவா அய்யாதுரை, தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ நாற்காலிக்கு குறி வைப்பது போல் தெரிகிறது.

ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (Chief executive officer) பதவியில் இருந்து தான் விலக விரும்புவதாக எலான் மஸ்க் (Elon Musk) கூறியுள்ள நிலைப்பாட்டில், அந்த பதவியை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக சிவா அய்யாதுரை - நேரடியாக எலான் மஸ்க்கிடமே - விருப்பம் தெரிவித்துள்ளார்.

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

தமிழனுக்கு மட்டுமே சொந்தமான திமிரு!

தமிழனுக்கு மட்டுமே சொந்தமான திமிரு!

இந்த நக்கலும் திமிரும் தமிழுக்கு மட்டுமே சொந்த என்று கூறும் அளவிற்கு சிவா அய்யாதுரை ஒரு காரியத்தை செய்துள்ளார்!

எலான் மஸ்க்கை கையில் பிடிக்க வேண்டும் என்றால்.. அவரிடம் இருந்து உடனடியாக பதில் கிடைக்க வேண்டும் என்றால், அவரை மென்ஷன் (Mention) செய்து ட்வீட் செய்வது தான் சிறந்த வழி என்பதை, சிவா அய்யாதுரை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார் போல!

ஒரு ட்வீட்டில், எலான் மஸ்க்கை குறிப்பிட்டு ட்விட்டர் சிஇஓ பதவியை தனக்கு கொடுக்குமாறு சிவா அய்யாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்!

அன்புள்ள எலான் மஸ்க்.. என்ன பண்ணனும் நீங்களே சொல்லுங்க!

அன்புள்ள எலான் மஸ்க்.. என்ன பண்ணனும் நீங்களே சொல்லுங்க!

ட்விட்டர் சிஇஒ பதவியை கோரி சிவா அய்யாதுரை பதிவிட்ட ட்வீட் பின்வருமாறு:

"டியர் மிஸ்டர். மஸ்க் ,

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்கிற பதவியில் அமர நான் ஆர்வமாக உள்ளேன். நான் எம்ஐடியில் 4 பட்டங்கள் பெற்றுள்ளேன் மற்றும் 7 வெற்றிகரமான உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களையும் உருவாக்கி உள்ளேன். (ட்விட்டர் சிஇஒ பதவிக்கு) விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை பற்றி கூறவும்"

இப்படிக்கு,

டாக்டர், சிவா அய்யாதுரை, எம்ஐடி பிஎச்டி,
இமெயிலை கண்டுபிடித்தவர்"

Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!

சிவா அய்யாதுரையை கிண்டல் அடிக்கும் ட்விட்டர் வாசிகள்!

சிவா அய்யாதுரையை கிண்டல் அடிக்கும் ட்விட்டர் வாசிகள்!

சிவா அய்யாதுரையின் இந்த ட்வீட் பெரும்பலான ட்விட்டர் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மறுகையில், சில பயனர்கள் சிவா அய்யாதுரையின் இந்த ட்வீட்டை கிண்டலாடுதும் வருகின்றனர்.

அய்யாதுரையின் இந்த ட்வீட்டை கேலி செய்யும் விதமாக, கிரெக் ஆட்ரி என்பவர், "எலான் மஸ்க் ஒருவரை பணியமர்த்துகிறார் என்றால், அவர் கடைசியாகத்தான் அவர் டிகிரிகளை பார்ப்பார்" என்று கூறி உள்ளார்.

அதாவது உங்கள் டிகிரிகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது; எலான் மஸ்க் அதை மதிக்க மாட்டார் என்பதை பூதமாக குறிப்பிட்டுஉள்ளார்.

இன்னொருவர், "உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். உங்கள் கல்வியை நீங்கள் குறிப்பிடுவதால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என்று ட்வீட் செய்துள்ளார்!

அய்யாதுரை இரண்டாவது ஆள் தான்!

அய்யாதுரை இரண்டாவது ஆள் தான்!

1978 இல் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமை (Computer Program) உருவாக்கிய அய்யாதுரை, அதை இமெயில் (email) என்று அழைத்தார்.

அது இன்பாக்ஸ் (Inbox), அவுட்பாக்ஸ் (Outbox), ஃபோல்டர்ஸ் (Folders), மெமோ (Memo), அட்டாச்மென்ட்ஸ் (Attachments), அட்ரெஸ் புக் (Address Book) என இன்டர் ஆபீஸ் மெயில் அமைப்பின் (Interoffice mail system) அனைத்து செயல்பாடுகளையும் பிரதிபலிக்கிறது.

அதனை தொடர்ந்து, 1982 இல் அமெரிக்க அரசாங்கம், அய்யாதுரைக்கு மின்னஞ்சலுக்கான முதல் காப்புரிமையை (Copyright for Email) வழங்கியது. இப்படியான உலகாலவிய புகழை தன்வசம் கொண்டுள்ள சிவா அய்யாதுரை - ட்விட்டர் சிஇஒ பதவிக்கு விண்ணப்பித்த இரண்டாவது நபர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அய்யாதுரைக்கு முன், பிரபல யூடியூபர் ஆன மிஸ்டர் பீஸ்ட் (MrBeast), ட்விட்டர் சிஇஓ பதவிக்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Shiva Ayyadurai Wants To Be New Twitter CEO Asks Elon Musk To Advise The Process

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X