உலகின் முதல் 8கே டிவி ரூ.88,00,610 மட்டுமே..!!
ஜப்பான் நாட்டின் மின்சாதன நிறுவனமான ஷார்ப் உலகின் முதல் 8கே தொலைகாட்சி பெட்டிகளை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதல் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த தொலைகாட்சி பெட்டியின் விலை இந்திய மதிப்பில் ரூ.88,00,610 மட்டுமே..!
சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

இவ்வளவு விலைக்கு இந்த தொலைகாட்சியில் அப்படி என்ன விசேஷம் என்றால் இது தான் 8கே ரெசல்யூஷன் கொண்ட உலகின் முதல் தொலைகாட்சி ஆகும். 8கே ரெசல்யூஷன் என்றால் 16 மடங்கு ஃபுல் எச்டி எனப்படும் அதிக துல்லியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர், ராஜமவுலி படங்களை 'இப்படி தான்' பார்க்கணும்..!
அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முதல் விற்பனையை துவங்கும் இந்த தொலைகாட்சி 85 இன்ச் திரையை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொலைகாட்சியின் சிறப்பம்சமே 8 கே ரெசல்யூஷன் தான், ஆனால் இன்று வரை உலகில் 8கே ரெசல்யூஷன் கொண்ட வீடியோ எதுவும் இல்லை என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications