உலகி்ன் 'மெகா சைஸ்' டிவியை களமிறக்கும் ஷார்ப்!

Posted By: Karthikeyan
உலகி்ன் 'மெகா சைஸ்' டிவியை களமிறக்கும் ஷார்ப்!

ஷார்ப் நிறுவனத்தின் டிவிகள் மிகவும் தரம் வாய்ந்தவை. அந்த வகையில் ஷார்ப் தனது புதிய உலக மெகா சைஸ் டிவியைக் களமிறக்க இருக்கிறது. திரையரங்கத் திரை போல் இருக்கும் இந்த டிவிக்கு ஆகுவோஸ் எல்இடி டிவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

4 அடி உயரம், 6 அடி அகலம் மற்றும் 8 அடி நீளத்தில் வரும் இந்த டிவி பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருக்கும். அதுபோல் இந்த டிவியை வீடுகளில் வைத்தால் இந்த டிவிதான் வீ்ட்டின் மையமாக இருக்கும்.

இந்த பிரமாண்ட டிவி மிகவும் துல்லியமாக இருக்கும். ஏனெனில் இதன் ரிசலூசன் அதிகமாக இருக்கிறது. இதன் விலை 10,999.99 அமெரிக்க டாலர்களாகும். இந்த டிவியின் எடை 141 பவுண்டுகளாகும்.

இந்த ஆக்குவோஸ் டிவி ஒரு முழுமையான எச்டி வசதியைக் கொண்டது. அதோடு இரண்டு 3டி கண்ணாடிகளையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டிவி இணையதள இணைப்பு வசதியும் கொண்டிருப்பதால் ரசிகர்கள் இணையதளம் மூலமாக இந்த டிவியில் நெட்ப்ளக்ஸ், ஹூலு, ஆக்குவோஸ் அட்வான்டேஜ் லைவ் போன்ற நிகழ்ச்சிகளை அனுபவிக்க முடியும்.

இந்த டிவியின் மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைக்கலாம் என்று டிவி ஆய்வாளர் அவி க்ரீன்கார்ட் கூறுகிறார். ஏனெனில் பெரிய டிவி இருக்கும் போது அதில் நிகழ்ச்சிகளைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வருவார்கள் என்று கூறுகிறார். அதன் மூலம் அவர்களுக்கு உறவு நெருக்கம் அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்.

எது எப்படியோ, குடும்பங்கள் திரையரங்குகளாக மாறும் நாள் தொலைவில் இல்லை என்று மட்டும் புரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot