கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - பாகிஸ்தான் சோதனை: வடகொரியாவுக்கு வேதனை.!
இதையடுத்து நேற்று இந்த சாகின் 2 ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது, அரபிக் கடல் பகுதியில் இந்த ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 2 ஏவுகனையை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. குறிப்பாக அணு ஆயுந்தங்களை ஏந்தி செல்லும் இந்த ஏவுகணை 1500கி.மீட்டர் தொலைவுக்கு
அப்பால் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க கூடிய வல்லமை படைத்தது. அடிக்கடி வடகொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது, இந்நிலையில் அந்நாட்டுக்கு போட்டியாக பாகிஸ்தானும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 2 ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

மேலும் பாகிஸ்தானின் Ispr அமைப்பின் படி சாகின் 2 ஏவுகணை பாகிஸ்தானின் மூலோபாய அமைப்பை பாதுகாப்பதற்க்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு
ஏற்கனவே கடந்த 2008-ம் ஆண்டு இந்த சாகின் 2 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் ஹதீப்-6 என்ற ஏவுகணையையும் சோதனை செய்தது.

ரகசிய இடம்
அந்த சமயம் இரு ஏவுகணைகளின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததையொட்டி அப்போதைய பாகிஸ்தான் அதிபர்
பர்வேஸ் முஷாரப், ஏவுகணை தயாரிப்பு குழுவினருக்கு பார்ட்டுகளைத் தெரிவித்திருந்தார். இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தான் விஞ்ஞானிகள் ரகசிய இடம் ஒன்றில் வைத்து சோதித்துப் பார்த்துள்ளனர்.

சாகின் 2
இதையடுத்து நேற்று இந்த சாகின் 2 ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது, அரபிக் கடல் பகுதியில் இந்த ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. டைரக்டர் ஜெனரல் மூலோபாய திட்டமிடல் பிரவு, தளபதி இராணுவ மூலோபாய படைகள் கட்டளை, nescom தலைவர், இராணுவ மூலோபாயப் படைகளின் மூத்த அதிகாரிகள், மூலோபாய அமைப்புகளின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி
இந்த சாகின் 2 ஏவுகணையின் சோதனை ஓட்டம் வெற்றியை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதேபோல அந்நாட்டு ஜெ.சி.எஸ்.சி அமைப்பிள் தலைவர்
மற்றும் மூத்த அதிகாரிகள் பாகிஸ்தான் விஞ்ஞானிகளுக்கு பாரட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications