ரெயின்போ ப்ரோஃபைல் பிக்சர் : தப்பு நடந்து போச்சே..!?
ஃபேஸ் புக்கை திறந்தாலே ஒரே வண்ணமயமாக வானவில் நிற ஃபேஸ்புக் ப்ரோஃபைல் பிக்சர்கள் கண்ணை கூச்சமடைய வச்சி இருக்குமே..? அதுல ஒரு பெரிய தப்பு நடந்து போச்சி மக்களே..!

மாசத்துக்கு 36 முறை ஃபேஸ்புக் ப்ரோஃபைல் பிக்சர்கள் மாத்துறவங்களும், அட இது நல்லா இருக்கேனு நினைச்சவங்களும் அந்த ஃபேஸ்புக் ரெயின்போ ஃபில்டர் ப்ரோஃபைல் பிக்சரை லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு வச்சிப்புட்டு விஷயம் தெரியாம சுத்திட்டு இருக்குதுங்க பய பக்கீங்க..!

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சட்டத்தை அமுல் படுத்தக்கோரி அமெரிக்கால நடந்த பிரச்சனைக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறியும் நோக்ககத்தில் ஃபேஸ் புக் செய்த ஒரு ஆராய்ச்சியே இந்த ஃபேஸ்புக் ரெயின்போ ஃபில்டர் ப்ரோஃபைல் பிக்சர்..!
எந்திரன்-2 : வில்லன்கள் இவங்க தான்..?!
ஆதரவு அளிப்பவர்கள் இதை 'செட்' செய்து கொள்ளலாம் என்று கூறிவிட உலகம் முழுக்க சுமார் 26 மில்லியன் ஃபேஸ்புக் பயன் படுத்துவோர்கள் இதை 'செட்' செய்து கொண்டுள்ளனர், பிரபலங்கள் உட்பட..!

அதில் சிலர் ஏன், எதற்கு என்று கூட தெரியாமல், அட இது செம்மையா இருக்கேனு 'செட்' செய்து பல்ப் வாங்கிக் கொண்டும் இருக்கின்றனர்..!

அதுல நம்ம ஊரு பயலுங்க தான் அதிகம்னு நினைக்கிறேன்..! செம்ம பல்ப்கள், தமிழ்நாடே பளபளனு மின்னுற அளவு பல்ப்கள்..! நீங்களுமா சரி சரி சத்தம் போடாம போய் ப்ரோஃபைல் பிக்சர் மாத்திடுங்க..!


Click it and Unblock the Notifications