3பில்லியன் ஒளியாண்டு தொலைவிலிருந்து வந்த 72 ஏலியன் சிக்னல்கள்!
வேற்றுகிரகவாசிகள் தேடல் நிறுவனமான சேட்டி-ல்(SETI -Search for Extraterrestrial Intelligence)பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள்
வேற்றுகிரகவாசிகளுக்கான தேடலில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏலியன் கேலக்ஸியில் இருந்து வந்த 72 மர்ம சிக்னல்களை கண்டறிந்ததாக கூறுகின்றனர்.
வேற்றுகிரகவாசிகள் தேடல் நிறுவனமான சேட்டி-ல்(SETI -Search for Extraterrestrial Intelligence)பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள், பூமியிலிருந்து 3பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள டிவார்ப் கேலக்ஸியிலிருந்து வந்த 400டெராபைட் ரேடியோ தரவுகளை ஆராயும் போது, அசாதாரண சிக்னல்களை கண்டறிந்தனர்.

தரவுகளை ஆய்வு செய்தல்
ஆட்டோமேசன் வாயிலாக தரவுகளை ஆய்வு செய்தல், பெரும் தரவு தொகுப்பில் பேட்டன்கள் மற்றும் அசாதாரணவற்றை கண்டறிதல் போன்ற பணியில் பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஈடுபட்டு வருகிறது.

பாஸ்ட் ரேடியோ ஃபர்ஸ்ட்
2007ல் முதன்முதலாக கண்டறியப்பட்ட அந்த பாஸ்ட் ரேடியோ ஃபர்ஸ்ட் வகையை சேர்ந்த சிக்னல்கள் மிகவும் பிரகாசமாவை மற்றும் விரைவான துடிப்புகளை கொண்டவை. தொலைதூர கேலக்ஸியில் இருந்து வந்ததாக நம்பப்படும் இந்த சிக்னல்கள், எதன்காராணமாக வந்தது என்பது தெரியவில்லை.

சமிக்ஞை
"இந்த சமிக்ஞைகளை வெளியிட்ட பொருளின் இயற்கை பண்புகள் என்ன என்பது தெரியவில்லை" என கூறிய சேட்டி,"வேற்றுகிரகவாசிகள் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியிருக்கலாம் என்பது உள்பட பல கோட்பாடுகள் நிலவுகின்றன" என தெரிவித்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள்
கடந்த ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில், விண்மீன்களுக்கு இடையேயான பயணங்களுக்கு மிகப்பெரிய ஒளி கப்பல்களை அனுப்ப, வேற்றுகிரகவாசிகளால் கட்டமைக்கப்பட்ட சக்திவாய்ந்த டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து கசியும் ஆற்றலே இந்த சமிக்ஞைகளே என்கின்றனர்.
விண்கலன்கள் அதிக வேகத்தை அடைவதை அனுமதிக்கும் வகையில்சிறிய அளவிலான நிலையான முடுக்கத்தை உருவாக்க,ஒளியிலிருந்து செலுத்திய சிறியளவு அழுத்தம் பயன்படுத்தப்படுகிறது.

400டிபி தரவுகள்
தொலைநோக்கிகள் பாதிக்காதவண்ணம் கம்பியில்லா தொலைத்தொடர்பு சமிக்ஞைகள் தடுக்கப்பட்ட இடமான யூ.எஸ் ரேடியோ க்வைட் ஜோனில் உள்ள, கிரீன் பேங்க் டெல்ஸ்கோப் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இந்த சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளது.
பெர்க்லியில் உள்ள ஆராய்ச்சி மாணவரான கேரி உருவாக்கிய மெசின் லேர்னிங் அல்காரிதம் மூலம் இந்த 400டிபி தரவுகள் ஆய்வுசெய்யப்பட்டது. இதில் மற்றொரு ஆராய்ச்சியாளர் ஏற்கனவே 21 எப்.ஆர்.பி சமிக்ஞைகளை கண்டறிந்தார்.
"கேரியின் இந்த ஆய்வு உற்சாகமளிக்கும் வகையில் மட்டுமில்லாமல், இவ்வகை சமிக்ஞைகளின் மாறக்கூடிய பண்புகளை புரிந்துகொள்ளவும் உதவுகிறது. மேலும் சாதாரண அல்காரிதம் வாயிலாக கண்டறிய முடியாத சமிக்ஞைகளை மெசின் லேர்னிங் மூலம் கண்டறிய முடியும் என உறுதியாக கூறலாம்" என்கிறார் சேட்டியின் டாக்டர் ஆண்ட்ரூ சைமன்.


Click it and Unblock the Notifications