425 மில்லியன் சந்தாதாரர்கள்., முழுமையான 5ஜி சேவையில் முதல்நபர்- முகேஷ் அம்பானி பெருமிதம்!

|

இந்தியாவில் ஜியோ 5ஜி தீர்வுகளை நிறுவனம் சோதனை செய்துள்ளதாகவும், அதில் 1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான வேகத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி கூறினார். ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்த தகவல்களை பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வு

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வு

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்த அறிவிப்புகளை பார்க்கலாம். இந்தியாவில் ஜியோ 5ஜி தீர்வுகளை நிறுவனம் சோதனை செய்துள்ளதாகவும், அதில் 1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான வேகத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளோம். 5ஜி புலம்-சோதனைகளை தொடங்க தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் சோதனை ஸ்பெக்ட்ரம்களையும் ஜியோ பெற்றுள்ளது. மேலும் முழுமையான 5ஜி நெட்வொர்க் ஆனது நாடு முழுவதும் இருக்கும் ஜியோ தரவு மையங்களிலும், நேவி மும்பையில் சோதனை தளங்களும் நிறுவப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

முழு அளவிலான 5ஜி சேவை

முழு அளவிலான 5ஜி சேவை

முழு அளவிலான 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் முதல் நபர் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். அதேபோல் அறிவிக்கப்பட்ட 5ஜி-ரெடி சாதனங்களுக்கும் ஜியோ வேலை செய்யும் என கூறினார். இந்திய அளவில் 5ஜி தீர்வுகள் நிரூபிக்கப்பட்டவுடன் வெளிநாட்டில் உள்ள பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இதை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார். தொற்று பரவல் காலத்திலும் 65000 புது பணியிடங்கள் உருவாக்கி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜியோ மற்றும் கூகுள் கிளவுட்

ஜியோ மற்றும் கூகுள் கிளவுட்

ஜியோ மற்றும் கூகுள் கிளவுட் ஆகியவை 5ஜி-யிலும் கூட்டாளர்களாக உள்ளன. இந்த ஒத்துழைப்பின் ஒருபகுதியாக ஜியோ தனது சில்லறை வணிகத்தை கூகுள் கிளவுட் வணிகத்திற்கு மாற்றும் என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். ஜியோ ஃபைபர் தற்போது 3 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் இணைய வழங்குனராகும். தற்போதுவரை ஜியோ ஃபைபர் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர்

அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பிராட்பேண்ட் ஆபரேட்டராக மாறியுள்ளது என்பதை முகேஷ் அம்பானி பெருமையுடன் குறிப்பிட்டார். ஜியோ ஃபைபர் நாடுமுழுவதும் 3 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. நிறுவனம் 12 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணி வளாகங்களை சென்றடைந்துள்ளது.

 425 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள்

425 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள்

ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டில் மட்டும் 37.9 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் சேர்த்துள்ளது. அதேபோல் 425 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு சேவை செய்கிறது. ஜியோ பிளாட்ஃபார்ம்களின் நிகர லாபம் ரூ.86,493 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.

உலகளிவில் மிக மலிவான ஸ்மார்ட்போன்

உலகளிவில் மிக மலிவான ஸ்மார்ட்போன்

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வில் பேசிய முகேஷ் அம்பானி புதிய ஸ்மார்ட்போன் குறித்து அறிவித்தார். அதில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமின்றி உலகளிவில் மிக மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும் என குறிப்பிட்டார். இந்த ஸ்மார்ட்போன் சில சுவாரஸ்யமான அம்சங்களுடன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்திய சந்தையில் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

மேலும் இந்த ஸ்மார்ட்போன் தனிப்பயனாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஓஎஸ் உடன் வரும் எனவும் வாய்ஸ் அசிஸ்டென்ட் உட்பட ஜியோ, கூகுளின் அனைத்து பயன்பாட்டு அம்சங்களோடு வரும். இதில் மொழி பெயர்ப்பு வசதிக்கு பிரத்யேக ஏற்பாடு இருக்கிறது, ஹை-பில்டர் ஸ்மார்ட் கேமரா அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை

இந்த நிகழ்வில் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கலந்துகொண்ட ஜியோவுடனான கூட்டாண்மை குறித்து பேசினார். சந்தையில் மிகவும் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனா இது இருக்கும். இதன் விலை தற்போது அறிவிக்கவில்லை. சமீபத்திய ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள், ஸ்மார்ட் கேமரா, மொழிபெயர்ப்பு ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். இது முதல்முறை ஆன்லைனுக்கு செல்லும் பயனர்களுக்கு என வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Serves Over 425 Million Subscribers, 5G Network Installed in Across Nation- Mukesh Ambani in Reliance AGM 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X