அடுத்த மாசம் 14 கடைசி.. Aadhaar அட்டை வச்சிருந்தா அலெர்ட்.. இல்லன்னா வீண் செலவு.. ஏன்? எதற்கு?
இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது ஆதார் அட்டை(Aadhaar card). அதுவும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு வழங்கும் பல சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் தான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் வைத்திருக்கும் பயனர்கள் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அல்லது விவரங்கள் மாறி இருந்தால் அடுத்த மாதம் 14 (செப்டம்பர் 14)-ஆம் தேதி தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும்.
அதாவது இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது ஆதார் கார்டு. குறிப்பாக இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஆதார் கார்டில் எதாவது பிழை இருந்தால் நமக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பது நல்லது.

ஒருவேளை உங்களது ஆதார் அட்டையில் பிழை இருந்தால் அதை வரும் செப்டம்பர் 14 (September 14)-ம் தேதிக்குள், நீங்கள் இலவசமாகப் புதுப்பிக்கலாம். ஆனால் இந்த தேதிக்குப் பிறகு, எந்த ஒரு விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
அதேபோல் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016-இன் படி தனிநபர்கள் தங்களின் ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு பத்து (10) வருடங்களுக்கும் ஒருமுறை தங்களது அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
எனவே மக்கள் ஆதார் கார்டு விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக அரசாங்க திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. எனவே ஆதார கார்டில் இருக்கும் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மிகவும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதாவது சிலருக்குப் பிறந்த தேதியில் மாற்றம் இருக்கலாம், சிலருக்குப் பெயரில் பிழை இருக்கலாம். இதுபோன்ற நபர்களும் இலவசமாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். சரி இப்போது ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் எளிமையான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் மை ஆதார் (my aadhaar) என்பதை கிளிக் செய்த பின்பு கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.
வழிமுறை-3: அதேபோல் இந்த சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.

வழிமுறை-4: அதன்பின்பு உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும்.
வழிமுறை-5: அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்தல் வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








