மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய புதிய ஏற்பாடு.!

சர்வதேச கருத்தரங்கில் பேசிய இபிசிஏவின் உறுப்பினரான சுனிதா நரைன்,சென்சார் அடிப்படையிலான தொழில்நுட்பம் மாசுபாடு ஏற்படுத்துபவர் மீது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

|

இப்போது வரும் தொழில்நுட்பம் அனைத்து இடங்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் தலைநகர் டெல்லி பகுதியில் வாகனங்களின் அளவைக் கண்டறிய உதவும் சென்சாரை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய புதிய ஏற்பாடு.!

மேலும் டெல்லியின் எல்லைப் பகுதியில் அடுத்த மாதம் முதல் இந்த RFID எனப்படும் ரேடியே அலைக்கற்றை அடையாள கருவி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவியாகத் தான் இருக்கும்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

தற்சமயம் ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தை நிறுவ சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு (EPCA) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி

டெல்லி

குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் டெல்லி-க்குள் நுழையும் வாகனங்களை சென்சார் மூலம் மாசுபடுத்தும் அளவைக் கண்டறிந்து விடும். எனவே சராசரி அளவை விட, அதிக மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு, உடனடியாக அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது

சுனிதா நரைன்

சுனிதா நரைன்

சர்வதேச கருத்தரங்கில் பேசிய இபிசிஏவின் உறுப்பினரான சுனிதா நரைன்,சென்சார் அடிப்படையிலான தொழில்நுட்பம் மாசுபாடு ஏற்படுத்துபவர் மீது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த கருவி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து இடங்களுக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா

சீனா

இந்த திட்டத்தால் ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டு, அதன்பிறகு ஓட்டுநர்களிடையே அச்சம் தொற்றிக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் 10 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் வந்துவிட்டது.

அதிகப்படியான வாகனங்கள்

அதிகப்படியான வாகனங்கள்

இந்நிலையில் அதிகப்படியான வாகனங்கள் ஒரே நேரத்தில் வரும் போது, மாசுபாடு ஏற்படுத்தும் குறிப்பிட்ட வாகனத்தை மட்டும் கண்டறிவது மிக கடினம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Best Mobiles in India

English summary
Sensors to spot polluting vehicles : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X