சரவெடி சப்வூப்பர்.. வீடு மட்டுமல்ல.. தெருவே அதிரும்.. 350W அவுட்புட்.. டீபெஸ்ட் பேஸ் டவுன்.. எந்த மாடல்?
ஒரேவொரு சப்வூப்பர் மூலம் உங்களது வீடு மட்டுமல்லாமல், தெருவையே அதிர வைக்கும்படியான அம்சங்கள் மற்றும் டெக்னாலஜியுடன் சென்ஹெய்சர் ஆம்பியோ சப் (Sennheiser AMBEO Sub) சப்வூப்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 350W ஆடியோ அவுட்புட், டால்பி சப்போர்ட் போன்ற பட்டாசான அம்சங்களை கொண்டிருக்கிறது.
நம்மில் பெரும்பாலானோருக்கு பேஸ் சவுண்ட் மீது அதீத ஆர்வம் இருக்கும். இதனாலேயே பலரது வீட்டில் சாங்ஸ் கேட்பது முதல் சீரியல் பார்ப்பது வரையில் ஹோம் தியேட்டர் அல்லது சவுண்ட்பார் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஸ்பீக்கர்களைவிட சப்வூப்பர்களே பேஸ் அனுபவத்தை சிறப்பாக மாற்றுக்கிறது. இதன் காரணமாக, சப்வூப்பர்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இவர்களை ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்கும் வகையில் பிரம்மாண்டமான அம்சங்களுடன் சென்ஹெய்சர் நிறுவனத்தின் சென்ஹெய்சர் ஆம்பியோ சப்வூப்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 27Hz டீபெஸ்ட் பேஸ் டவுன், கிளாஸ் டி ஆம்ளிஃபையர், லோவ் எனர்ஜி ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற பிரம்மாண்ட அம்சங்களின் பின்னியெடுக்கிறது. இதன் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்வருமாறு.
சென்ஹெய்சர் ஆம்பியோ சப் அம்சங்கள் (Sennheiser AMBEO Sub Specifications): இந்த சப்வூப்பர் 1எக்ஸ் கிளாஸ் டி ஆம்ளிஃபையர் (1x class D amplifier) கொண்டுள்ளது. இதில் 350W ஆர்எம்எஸ் (RMS) டோட்டல் ஆடியோ பவர் (Total audio power) வருகிறது. டூயல் கோர் எஸ்ஓசி (Dual Core SOC) ஆடியோ சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 27Hz வரை டீபெஸ்ட் பேஸ் டவுன் (Deepest Bass Down) கிடைக்கும்.
இந்த சென்ஹெய்சர் ஆம்பியோ சப்வூப்பரில் 8 இன்ச் செல்லுலோஸ் கோன் டிரைவர் (Cellulose Cone Driver) கொடுக்கப்பட்டுள்ளது. 1 எக்ஸ் மோனோ ஆர்பிஐ (1x Mono RCA) ஆடியோ இன்புட் வருகிறது. ப்ளூடூத் வெர்ஷன் 5.2 (Bluetooth version 5.2) கனெக்டிவிட்டி வருகிறது. இது ஒரு லோவ் எனர்ஜி கனெக்டிவிட்டி (Low Energy Connectivity) வெர்ஷனாகும்.
இதன் மூலம் டிவி, லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இந்த சப்வூப்பர் இணைக்கும் போது குறைந்தபட்ச எலக்ட்ரிசிட்டி மட்டுமே செலவாகும். இந்த சப்வூப்பரை மற்ற ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், டிவி மற்றும் சவுண்ட் பார்களில் கனெக்ட் செய்யும் போது கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அனுபவத்துக்காக அட்வான்ஸ் மல்டி சப் அர்ரேய் டெக்னாலஜி (Advanced multi-sub array technology) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சப்வூப்பரை ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப் (Smart Control App) மூலம் கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும். மேலும், பேஸ் பூஸ்ட் (Bass Boost), ஹை - ரெஸ் ஆடியோ (Hi Res Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சப்போர்ட், ஆட்டோமேட்டட் செல்ப் கேலிப்ரேஷன் (Automated self-calibration), ஆம்பியோ விஸ்வலைசேஷன் டெக்னாலஜி (AMBEO Virtualization Technology) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ஹெய்சர் ஆம்பியோ சப்வூப்பர் 27 செ.மீ. நீளம், 36.7 செ.மீ. அகலம், 27 செ.மீ. உயரம் கொண்டுள்ளது. மொத்தமாக 8.2 கிலோ எடை கொண்டுள்ளது. இதற்கு இரண்டு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த சென்ஹெய்சர் ஆம்பியோ சப்வூப்பரின் விலை ரூ.69,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் (Amazon) மற்றும் சென்ஹெய்சர் இ-ஸ்டோர் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் நீடித்து உழைக்கக் கூடிய தரமும் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அனுபவமும் இதில் கிடைக்கும் என்பதால் விற்பனையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சப்வூப்பரோடு பிரீமியம் தரத்தில், சென்ஹெய்சர் ஆம்பியோ சவுண்ட்பார் பிளஸ் (Sennheiser AMBEO Soundbar Plus) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சவுண்ட்பாரில் மொத்தமாக 9 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் 400W ஆடியோ அவுட்புட் கிடைக்கும். இதன் விலை ரூ.1,39,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








