Home
News

ஒரு WhatsApp மெசேஜ் செய்தால் வங்கி தரும் ரூ.6000 மானியம்! வேகமாக பரவும் மெசேஜ் மோசடியா? உண்மையா?

இந்திய whatsapp பயனர்கள் மத்தியில் புதிதாக ஒரு வைரல் மெசேஜ் காட்டு தீ போல வேகமாக பகிரப்பட்டு, மக்களிடையே பெரிய அளவு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. PNB வங்கி ரூ.6000 தொகையை சும்மா இலவசமாக வழங்குவதாக ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வருகிறது.

PNB என்று அழைக்கப்படும் பஞ்சாப் நேஷனல் பேங்க் இன் 130-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பும் பயனருக்கு ரூ.6000 இலவச நிதி மானியம் வழங்கப்படும் என்ற செய்தி வெகு வேகமாக வைரல் ஆகி வருகிறது. இந்த தொகையை பெற, அந்த வாட்ஸ்அப் மெசேஜ் உடன் ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. 6000 ரூபாயை பெற மக்கள், இந்த லிங்கை கிளிக் செய்து, அதனில் சில தகவல்களை உள்ளிட்ட வேண்டும்.

ஒரு WhatsApp மெசேஜ் செய்தால் வங்கி தரும் ரூ.6000 மானியம்! உண்மையா?

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆண்டுக் கொண்டாட்டமாக ரூ. 6,000 மதிப்பிலான நிதி மானியத்தை வழங்குவதாக ஒரு புதிய வாட்ஸ்அப் மெசேஜ் செய்தி பரவி வருகிறது. இந்த மானியத் தொகையை பெற வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு மெசேஜ் லிங்க்-ஐ கிளிக் செய்ய சொல்லி அந்த மெசேஜ் மக்களை தூண்டுகிறது. கேள்விக்குரிய செய்தி பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளம்பரமும் அப்படியே காண்பிக்கிறது.

அந்த விளம்பர போஸ்டரில், புத்தம் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி விளம்பரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,000 பெறுவதற்கு வாட்ஸ்அப் பயனர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்று காண்பிக்கிறது. வங்கி தனது 130வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால், அரசாங்கத்திடம் இருந்து நிதி மானியம் வழங்குவதாக அந்த போஸ்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த மெசேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளம் PNB-யின் இணையதளம் போல காட்சியளிக்கிறது.

ஆனால், இந்த மணியத் தொகை செய்தி முற்றிலும் தவறானது என்று அரசாங்கமும், PNB வங்கியும் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இது மோசடிக்காரர்களின் வேலை என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இந்த whatsapp மெசேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ள இணையதள லிங்க்-ஐ பயனர்கள் கிளிக் செய்ததும், அவர்களின் வாட்ஸ்அப் தரவு, வங்கி தரவு, பணம் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை இழக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரு WhatsApp மெசேஜ் செய்தால் வங்கி தரும் ரூ.6000 மானியம்! உண்மையா?

ஆகையால், மக்கள் இந்த போலி வாட்ஸ்அப் மோசடி மெசேஜ்ஜை உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த மெசேஜ் உடன் இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. PNB மற்றும் அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு PIB உண்மைச் சரிபார்ப்பு ஆகிய இரண்டும் இந்தச் செய்தியை நிராகரித்துள்ளன. எனவே இதுபோன்ற செய்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மோசடி மெசேஜ்ஜை பெற்றவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் எதையும் கிளிக் செய்ய வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மோசடி செய்பவர்கள் இந்த லிங்க் மூலம், உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் வங்கி விவரங்கள் உட்பட தனிப்பட்ட பயனர் தகவல்களை அனைத்தையும் சேகரிக்க முயல்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் தொடர்பு பட்டியலில் இல்லாத ஒருவரிடமிருந்து உங்களுக்கு whatsapp மெசேஜ் அல்லது SMS வந்தால், WhatsApp இல் இருக்கும் Report அம்சத்தை பயன்படுத்தி அவர்களை பிளாக் செய்வது சிறப்பானது. இதுபோன்ற ஸ்பேம் மெசேஜ்களை மக்கள் எப்போதும் புறக்கணிப்பது பாதுகாப்பானது. கூடுதலாக, எதிர்காலத்தில் மோசடி செய்திகளைப் பெறுவதை நிறுத்த, இந்தத் தொடர்புகளை பிளாக் செய்து வைப்பது பாதுகாப்பானது. அல்லது இதுபோன்ற செயல்பாட்டை நீங்கள் சைபர் செல்லுக்குப் புகாரளிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Send a WhatsApp message and get Rs 6000 subsidy this fast spreading message is scam or true
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X