புதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.! ஊரே சோகம்.!

|

செல்பியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியாகியுள்ளனர். புதிதாக திருமணமான மணப்பெண்ணும் பலியாகியுள்ளனர். ஆற்றில் அதிக தண்ணீர் ஓடுவதை கண்டு செல்பி எடுத்த போது, இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

 6 பேர் சென்றுள்ளனர்

6 பேர் சென்றுள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இயற்கையை ரசிக்க வந்தனர். இதில், 4 பெண்களும், 2 ஆண்களும் அடங்குவர்.

புதுமண தம்பதி

புதுமண தம்பதி

நிவேதா (20) இவர் ஊத்தங்கரையை சேர்ந்தவர். பிரபு பர்கூர் பகுதியை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 2 வாரத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது. இவர்கள் இவரும் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றனர். உடன் உறவினர் கனிதா, சினேகா, சந்தோஷ், யுவராணி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

செல்பி மோகம்

செல்பி மோகம்

படம் பார்த்துவிட்டு வீடு திரும்போது, பாம்பாறு அணைக்கு சென்ற இவர்கள் கரையை ஒட்டி செல்பி எடுக்க முயன்றனர். பிரபுவை தவிர மற்ற 5 பேரும் அணையின் அபாயகரமான பகுதியில் இறங்கி நின்ற போஸ் கொடுத்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரின் வேகத்தால் 5 பேரையும் அடித்து சென்றுள்ளது.

தினமும் 170ஜிபி, ப்ரீவாய்ஸ்கால் தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!தினமும் 170ஜிபி, ப்ரீவாய்ஸ்கால் தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!

ஒருவர் உயிருடன் மீட்பு

ஒருவர் உயிருடன் மீட்பு

நிவேதா கணவர் பிரபு ஆற்றில் குதித்து யுவராணியை காப்பாற்றினார். கரைக்கு வந்தடைந்த இருவரின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

புதியபோனுக்கு 40%தள்ளுபடி 17ம்தேதி வரை நீட்டிப்பு-தெறிக்கவிட்ட அமேசான்.!புதியபோனுக்கு 40%தள்ளுபடி 17ம்தேதி வரை நீட்டிப்பு-தெறிக்கவிட்ட அமேசான்.!

உடல்கள் மீட்கப்பட்டது

உடல்கள் மீட்கப்பட்டது

உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மீட்டனர். பிறகு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபோன்று ஏற்கனவே பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 இன் நம்பமுடியாத சலுகை விபரங்கள்!பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 இன் நம்பமுடியாத சலுகை விபரங்கள்!

ஊரே சோகத்தில் மூழ்கியது

ஊரே சோகத்தில் மூழ்கியது

திருமணாகி 15 நாள் ஆன நிலையில், புதுமண பெண் நீரில் அடித்து சென்றது அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
selfie kills New brides in krishnagiri : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X