Home
News

செல்பீ ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா சி5 அல்ட்ரா டூயல் எனும் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சிறப்பான செல்பீ எடுக்க அனுமதிக்கும் இந்த கருவியானது கருப்பு, வெள்ளை மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கும் இந்த கருவி டூயல் சிம் வசதி கொண்டிருப்பதோடு ரூ.29,990க்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

13 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமரா கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா சி5 அல்ட்ரா டூயல் கருவியில் இரு கேமராக்களிலும் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் சோனியின் எக்ஸ்மார் ஆர்எஸ் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதோடு வீடியோ ஸ்டேபிலைசர், ஆட்டோ சீன் ரெக்ஃனீஷன், 25 எம்எம் வைடு ஆங்கிள் லென்ஸ், 4எக்ஸ் டிஜிட்டல் சூம் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

 செல்பீ ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் சார்ந்த எக்ஸ்பீரியா சி5 அல்ட்ரா டூயல் 64 பிட் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த செல்பீ !

மற்ற சோனி கருவிகளை போன்று இந்த கருவி தூசி மற்றும் வாட்டர் ப்ரூஃப் வழங்கப்படவில்லை என்றாலும் GPRS/ EDGE, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, Glonass, ப்ளூடூத், வை-பை, மைக்ரோ-யுஎஸ்பி, 3ஜி, மற்றும் 4ஜி எல்டிஈ போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2930 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த கருவி தற்சமயம் இந்தியாவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Selfie Focused Smartphone Launched at Rs. 29,990. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X