'படிச்சவன் தான் ஜெயிக்கணும்' - என்று சட்டம் ஒன்றுமில்லை..!

|

வகுப்பறைக்குள் கற்கும் கல்வி ஒருவகை, வகுப்பறைக்கு வெளியே கற்கும் கல்வி இன்னொரு வகை. இந்த இரண்டு வகை கல்வியையும் மீறிய ஒரு வகை இருக்கிறது அதுதான் - சுயகற்றல், அதாவது தனக்கு இருக்கும் ஆர்வத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு தனக்கு தானே கற்பித்துக் கொள்ளும் கல்வி..!

அப்படியான ஒரு கற்றல் முறையை மிகவும் கடினமான ஒரு போர் சூழலில் இருந்துக்கொண்டு நிகழ்த்தியது மட்டுமின்றி காற்று மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் போன்ற அன்றாட பிரச்சினைகளுக்கு தனது கற்றல் மூலம் தீர்வு ஒன்றையும் உருவாகியுள்ளார் - ஒரு ஆப்கான் இளைஞர்..!

சூரிய சக்தி :

சூரிய சக்தி :

முஸ்தபா முஹம்மதி - வெறும் 45 நாட்களில் சுற்று சூழலை சிறிது கூட மாசுப்படுத்தாத சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு வாகனத்தை உருவாக்கியுள்ளார்.

பெடல் அமைப்பு :

பெடல் அமைப்பு :

முஸ்தபா உருவாக்கிய வாகனமானது சூரிய ஒளியினால் சக்தியூட்டப் படும் வாகனத்தில் பெடல் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது, இதனால் மேகமூட்டமான நாட்களிலும் இதை இயக்க முடியும்.

முரண்பாடான வாழ்கை :

முரண்பாடான வாழ்கை :

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆப்கானியர்கள் மிகவும் பாதுகாப்பில்லாத மற்றும் முரண்பாடான வாழ்க்கை முறைக்குள் திணிக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்த பின்பு இதை உருவாக்கினேன் என்று கூறியுள்ளார் சுயமாக பொறியியல் கற்றுக்கொண்ட முஸ்தபா..!

வாழ்க்கை முறை :

வாழ்க்கை முறை :

மேலும் இந்த ப்ராஜக்ட் ஆனது முழுக்க முழுக்க ஆப்கான் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற் காக உருவானது என்றும் கூறியுள்ளார் முஸ்தபா..!

தொழில்நுட்ப திறன் :

தொழில்நுட்ப திறன் :

அதுமட்டுமின்றி "ஆப்கான் மக்கள் தங்களின் சொந்த தொழில்நுட்ப திறன்களை கையாளத் தெரிந்தவர்கள் எப்ன்பதை உலகிற்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்" என்றும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மீட்டெடுக்கப்பட்ட பாகங்கள் :

மீட்டெடுக்கப்பட்ட பாகங்கள் :

முஸ்தபாவின் விளக்கத்தின் படி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் மீட்டெடுக்கப்பட்ட பாகங்களை கொண்டு இந்த மூன்று சக்கர சோலார் பவர் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

செலவு :

செலவு :

மேலும் இதை உருவாக்க ஏறக்குறைய 1548 யுஎஸ்டி டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது என்கிறார் இதை வடிவமைத்த முஸ்தபா..!

சோலார் பேனல்கள் :

சோலார் பேனல்கள் :

இரண்டு பேர் அமரக்கூடியப்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனமானது, பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கும் சூரிய சக்தியோடு இணைக்கப்பெற்ற 60 -வோல்ட் பேட்டரிகள் மூலம் இயங்குகிறது.

மணிக்கு 40 கிலோமீட்டர் :

மணிக்கு 40 கிலோமீட்டர் :

இந்த வாகனத்தின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோலார் பவர்டு :

சோலார் பவர்டு :

ஆப்கானிஸ்தான் அரசாங்கம், இவ்வகையான சோலார் பவர்டு வாகனத்தை சட்டப்பூர்வமாக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்தியாவே வெறுக்கும் ஒரு முகம் : நம்ம ஏர்டெல் 4ஜி பொண்ணு..??!


பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!


அடடா.. இத்தனை வருஷமா 'இது' தெரியாம போச்சே...!!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Self Taught Afghan Engineer Makes Solar Powered Vehicle. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X