பொல்லாதவன் பட பானியில் தானே செல்போனை மீட்டு கெத்து காட்டிய இளைஞன்.!
சிமியோன் கண்டுபிடித்த அந்த செல்போன் எண்ணை வைத்து பேஸ்புக் மற்றும் அனைத்த சமூகவலைதளங்களில் தேடினார், அப்போது பேஸ்புக் மெசஞ்சர் பகுதியில் போனை திருடிய நபரின் பேஸ்புக் ஐடி-ஐ கண்டுபிடித்துள்ளனர்.
சென்னையில் திருடபோன ஐபோனை இளைஞர் ஒருவர் தனது நன்பரின் உதவியோடு தானே தேடிக் கண்டுபிடித்ததோடு திருடியவரையும் காவல்துறையில் பிடித்து ஒப்படைத்துள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த சிமியோன் தனியார் நிறுவனத்தில் மருத்து விறப்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13-ம் தேதி அன்று புரசைவாக்கம் சாலையில் உள்ள ஏர்டெல் ஷோரூம்மில் சிம் கார்டு குறித்து விசாரிக்க சென்றபோது தனது விலை உயர்ந்த ஐபோன் திருடுபோனது இது குறித்து அந்த ஷோரூம்மில் விசாரித்த போது எந்த விவரமும் தெரியவில்லை.
அதை தொடர்ந்து சிமியோன் கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார், செல்போன் திருடுபோனதை குறித்து சிமியோன் பல முறை காவல் நிலையத்தை தொடர்பு கொணடு புகார் அளித்தும் பலனில்லை. இதையடுத்து தனது நன்பர் ஜாபரின் உதவியுடன் தானே விசாரணையில் இறங்கினர்.

சிசிடிவி
முதலில் குறிப்பிட்ட ஷோரூம்மில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து அதில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த இரண்டு வடமாநில இளைஞர்களின் நடவடிக்கைகள் சற்று சந்தேகத்திற்கு இடமாகி இருந்துள்ளன. அவர்களை பற்றி விவரங்களை தேடத் தொடங்கியதாக கூறுகிறார் சிமியோன்.

செல்போன் எண்
சிசிடிவி மூலம் தாங்கள் சேகரித்த தகவல்களை சிமியோன் காவல்துறையில் கொடுத்துள்ளார், ஆனாலும் பலனில்லை. இதையடுத்து அந்த இளைஞர்களை குறித்து விவரங்களை சேகரிக்க தொடங்கினார் சிமியோன். அடுத்து அந்த இளைஞர்கள் வாங்கிய செல்போன் எண்ணை கண்டுபிடித்து அதன் மூலம் அந்த நபரை நெருங்கியதாக கூறுகிறார் சிமியோன்.

பங்கஜ் சர்மா
சிமியோன் கண்டுபிடித்த அந்த செல்போன் எண்ணை வைத்து பேஸ்புக் மற்றும் அனைத்த சமூகவலைதளங்களில் தேடினார், அப்போது பேஸ்புக் மெசஞ்சர் பகுதியில் போனை திருடிய நபரின் பேஸ்புக் ஐடி-ஐ கண்டுபிடித்துள்ளனர், அவரின் பெயர் பங்கஜ் சர்மா. அப்போது அவர் தெரிவித்தது என்னவென்றால் சிசிடிவி காட்சகளும் பின்பு பேஸ்புக்கில் பார்த்த புகைப்படமும் ஒரே மாதிரயாக இருந்தது. பின்பு பேஸ்புக் மூலம் அவருக்கு மெசேஜ் அனுப்பினார் சிமியோன். ஆனால் அதற்கு தகுந்த பதில் இல்லை. எனவே பங்கஜ் பேஸ்புக் பகுதியில் இருந்த நெருங்கிய நன்பரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து பங்கஜ் செல்போன் எண்ணை வாங்கினார் சிமியோன்

செல்போன் உறையாடல்
பின்பு செல்போன் உறையாடல் மூலம் செல்போன் திருடியவர் மாதவரம் பகுதியில் இருப்பதை உறுதி செய்த சிமியோன், இரவு முழுவதும் சுற்றி குறிப்பிட்ட அந்த நபரை பிடித்ததாக கூறுகிறார்.

சிறையில் அடைத்தனர்
அதன்பின்பு செல்போனை திருடிய நபரையும் வசமாக பேசி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் செல்போனை திருடியது பிகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து பங்கஜை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். போலீசார் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தானே மேற்கொண்டு தனது செல்போனை மீட்டதுடன் திருடியவரையும் காவல்துறையில் பிடித்துக்கொடுத்த சிமியோனின் துனிச்சல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications