Subscribe to Gizbot

அச்சத்தில் வடகொரியா, 'பாதுகாப்பு' விடயத்தில் உஷார் நிலை..!

Written By:

வட கொரியாவை - நவீன காலத்தின் 'ஹிட்லர் பிராந்தியம்' என்றே கூறலாம். தந்தையின் மறைவிற்கு பிறகு பகிரங்கமாக அடுத்த வடகொரியத்தலைவர் என்று அறிவிக்கப்பட்டார் கிம் ஜொங்-உன், அவரை கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி என்றே கூறலாம், அப்படியான நடவடிக்கைகளை கொண்டவர் கிம் ஜொங்-உன். அதற்கு உதாரணம் தான் - சமீபத்தில் வடகொரியாவில் நிகழ்த்தப்பட்டு, உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கும் - ஹைட்ரஜன் வெடி குண்டு பரிசோதனை !

வடகொரிய இராணுவத்தில் 'டீஜங்' எனப்படும் ஜெனரல் நிலைக்கு இணையான பதவியில் உள்ள கிம் ஜொங்-உன், வட கொரியாவில் கணினி பொறியியல் படித்துதுள்ளாக நம்பப்படுகிறது அதை உறுதி செய்யும் வகையில்தான் இருக்கிறது தற்போது வெளியாகியுள்ள வடகொரியாவின் 'ரெட் ஸ்டார்' திட்டம் பற்றிய தகவல்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரெட் ஸ்டார் :

ரெட் ஸ்டார் :

சமீபத்தில் வட கொரியா அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒருகணினி அமைப்பு தான் 'ரெட் ஸ்டார்' (Red Star).

அச்சம் :

அச்சம் :

மிகவும் ரகசியமான ஆவணங்கள் எந்தவொரு விதத்திலும் வெளியே கசிந்துவிடக்கூடாது, 'ஹேக்' செய்யப்பட்டு விட கூடாது என்ற அச்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளதே இந்த 'ரெட் ஸ்டார்' கணினி அமைப்பு (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) என்பது குறிப்பிடத்தக்கது.

டவுண்லோட் :

டவுண்லோட் :

மேலும் இந்த 'ரெட் ஸ்டார்' அமைப்பை கொண்டு வடகொரியாவில் இல்லாவிட்டாலும் வெளிதேசத்தில் இருந்தும்கூட ரகசிய ஆவணங்களை டவுண்லோட் செய்து கொள்ள முடியும் என்ற தகவல் கசிந்துள்ளது.

விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக் :

விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக் :

மேலும் கிம் ஜொங் மற்றும் அவரின் நண்பர்கள் அனைவரும் பிற வெளிநாட்டு அரசாங்கத்தை போலவே விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக் போன்ற உரிமங்களை பெற அச்சம் கொள்கின்றனர்.

ஆவணங்கள் திருடப்படலாம் :

ஆவணங்கள் திருடப்படலாம் :

அருகிலுள்ள தென்கொரியா, ரஷ்யா மற்றும் மேற்குகளில் போர் முடிந்துவிட்ட நிலையில் தற்போது ரகசிய ஆவணங்கள் திருடப்படலாம் என்று வடகொரியா அச்சத்தில் உள்ளது.

மேற்கத்திய மென்பொருள் :

மேற்கத்திய மென்பொருள் :

முக்கியமாக மேற்கத்திய மென்பொருள் (Western software) மூலம் பாதுகாப்பு பின்னடைவுகள் ஏற்படலாம் என்று வடகொரியா உஷார் நிலையில் உள்ளது.

யூஎஸ்பி :

யூஎஸ்பி :

ரெட் ஸ்டார் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களில் யூஎஸ்பி பொருத்தப்பட்டால் உடனே அதை கண்டறிந்து கொள்ள முடியும் படி வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தடை :

தடை :

வட கொரியாவில் மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் ஊடககங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணைப்பு வளர்ச்சி :

இணைப்பு வளர்ச்சி :

இம்மாதிரியாக மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டே இணைப்பு வளர்ச்சி (growth of the connectivity) சார்ந்த முன்னேற்றங்களை அடைய வடகொரிய அரசு சிரமப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணுகல் :

அணுகல் :

வோர்ல்ட் வைட் வெப்-பில் (World Wide Web - WWW) இருந்து துண்டிக்கப்பட்ட வடகொரிய குடிமக்கள் ஒரு வரையறுக்கப்பட்ட அக-ஒரு உள் இணைய (intranet - an internal internet) மூலம் மட்டுமே சில அரசாங்க செய்தி ஊடகம் சார்ந்த அணுகலை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஹேக் செயல் :

ஹேக் செயல் :

கடந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு எதிராக 'சோனி லீக்' உட்பட பல வகையான ஹேக் செயல்களில் வடகொரியா ஈடுப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எளிமை :

எளிமை :

'ரெட் ஸ்டார்' போன்ற சுதந்திரமான ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆனது சைபர் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும் நம்பப்படுவதோடு பயனாளிகளுக்கு எளிமையாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆப் :

ஆப் :

அதாவது அதில் கொரியன் வேர்ட் ப்ராசஸர், காலண்டர் மற்றும் பதிப்பகத்திற்கு மற்றும் இசை டிரான்ஸ்கிரிப்ஷன்க்கான ஆப் போன்றவைகளும் இருக்கின்றனவாம்

தோற்றம் :

தோற்றம் :

இந்த அமைப்பு ஒரு ஆப்பிள் மேக் போன்ற தோற்றமுடையதாக இருப்பினும், லினக்ஸ் (Linux) நிரலாக்க மொழியால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கியூபா, ரஷ்யா மற்றும் சீனா :

கியூபா, ரஷ்யா மற்றும் சீனா :

இதே போல் சுதந்திரமான ஒரு அமைப்பை உருவாக்க கியூபா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளும் முழுவீச்சில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Security chiefs get into North Korea's top secret computer system. Read more about this Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot