தொழில்நுட்ப கருவிகளை இப்படி தான் சுத்தம் செய்யனும், ஆஹான்
இன்று அனைத்திற்கும் கருவிகள் மற்றும் சாதனங்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையில் தினசரி வாழ்வில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதோடு அவைகளை சரியாக பராமரிப்பதும் அவசியமாகும்.
கருவிகளை பராமரிப்பதில் முக்கிய விஷயமாக அதை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது தான். கீழ் வரும் ஸ்லைடர்களில் தொழில்நுட்ப சாதனங்களை சுத்தம் செய்வது எப்படி என்பதை பாருங்கள்..

பொருட்கள்
முதலில் கருவிகளை சுத்தம் செய்ய தேவையானவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்கிரீன்
அனைத்து கருவிகளிலும் பெரும்பாலும் திரையில் தான் அதிகப்படியான தூசு படியும். பொதுவாக திரையை சுத்தம் செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும்.

அமோனியா
சாராயம் மற்றும் அமோனியா போன்றவைகளை திரையில் பயன்படுத்த கூடாது. முடிந்த வரை சுத்தமான நீரினை பயன்படுத்துவது நல்லது.

ஸ்ப்ரே
முடிந்த வரை நேரடியாக ஸ்ப்ரே போன்றவைகளை பயன்படுத்தாதீர்கள்.

கீபோர்டு
மேக்கப் ப்ரஷ்களை கீபோர்டு சுத்தம் செய்ய பயன்படுத்தலாம், வாக்யூம் க்ளீனர்களை பயன்படுத்துவது ஆபத்தில் முடியும்.

சாராயம்
பெரும்பாலான கருவிகளின் வெளி புறங்களை சுத்தம் செய்ய சாராயம் மற்றும் நீரை சமமாக கலந்து பயன்படுத்தலாம்.

சிபியு
கம்ப்யூட்டர் சிபியுக்களில் படியும் தூசிகளை 4 முதல் ஆறு மாத இடைவெளியில் சுத்தம் செய்யலாம், இங்கும் வாக்யூம் பயன்படுத்துவது நல்லது கிடையாது.

ஃபேன்
கம்ப்யூட்டர் ஃபேன்களை சுத்தம் செய்யும் போது உங்களது விரல்களை பயன்படுத்தாம்.

கேமரா
கேமராக்களை கழற்றி சுத்தம் செய்வது சற்றே கடினமான காரியம், அதனால் தெரியாதவைகளை சோதித்து பிரச்சனையில் சிக்குவதை காட்டிலும் கேமரா சுத்தம் செய்பவரிடம் கொடுத்து இதை செய்து கொள்ளலாம்.

லென்ஸ்
லென்ஸ்களை சுத்தம் செய்யும் போது மாய்ஸ்ச்சர் செய்யப்பட்ட மைக்ரோஃபைபர் துணியினை பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications