நாஜி ஜெர்மனியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியத் தொழில்நுட்பங்கள்.!

  நாஜி ஜெர்மானியர்களால் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. பெரும்பாலும் போரின் போது பயன்படுத்தக் கூடிய நவீன ஏவுகனைகள், ஆயுதங்கள், விமானங்கள்தான் இவர்களுடைய உருவாக்கத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இவர்களுடைய தொழில் நுட்பங்கள் முடக்கப்பட்டன. இவர்களுடைய தொழில் நுட்பங்களுள் பல செயல் வடிவம் பெற்றன. சில தொழில் நுட்பங்கள் கருத்தாக்க வடிவத்திலேயே அழிந்து போயின.. அவற்றுள் 15 தொழில் நுட்பங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  1.Nuclear Weapons-நியூக்ளியர்

  அமெரிக்காவுக்கு இணையாக ஜெர்மன் நாடு அணுத் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியது. நியூக்ளியர் ரியாக்டர்கள் கட்டமைப்பு, ஐசோடோப்புகளைப் பிரித்தெடுத்தல், அணு உலைக்குத் தேவையான கடின நீர்( heavy water) தயாரித்தல் ஆகியவற்றில் நாஜி ஜெர்மனி சிறந்து விளங்கியது. இவர்களுடைய கண்டுபிடிப்புகள் அணு ஆயுதத் தயாரிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் முக்கியக் காரணிகளாக அமைந்தன.

  2. The World's First Mass-Produced Helicopter-ஹெலிகாப்டர்

  அச்சு நாடுகளும் கூட்டணி நாடுகளும் ஹெலிகாப்டர் தொழில்நுட்பம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் ஜெர்மனி உலகின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Flettner Fl 282 என்னும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை 1000 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. அவற்றுள் 24 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்தது. கூட்டணி நாடுகள் இத்தொழிற்சாலையை குண்டுகள் வீசி அழித்துவிட்டன.

  3. Space Planes-ஜெட்

  ஜெர்மனியில் இருந்து ஏவப்பட்டால், தரையில் இருந்து 90 மைல் தூரத்திற்கு உயரப் பறந்து நியூயார்க் நகரின்மீது குண்டு வீசுவதற்கு ஏற்பத் திட்டமிட்டு ராக்கெட் போன்ற வேகத்தில் பறக்கக்கூடிய ஜெட் விமானத்தைத் தயாரிக்க ஜெர்மனி திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்கு "Silbervogel" என்று இரகசியக் குறியீட்டுப் பெயரும் வைக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் கருத்தளவில்தான் இருந்தது. செயலாக்கம் பெறவில்லை.

  4. Sophisticated Jet Fighters and Bombers-ஜெட்

  ME-262 என்னும் ஜெட் விமானம் போர்க்களத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சமயத்தில், ஜெர்மனி அதனைவிட மேம்பட்ட பல ஜெட் போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இருந்தது. Ta-283, P.1101, Ta-400, Fa-269 VTOL fighter போன்ற .ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் பணியில் ஜெர்மனி ஈடுபட்டது. அவற்றுள் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேறவில்லை.

  5. Guided Missile Submarines-ராக்கெட்

  அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியாகச் சென்று அந்நாட்டைத் தாக்குவதற்காக ராக்கெட்டைத் தாங்கிய நீர் மூழ்கிக் கப்பலைத் தயாரிக்கும் திட்டம் ஜெர்மனியிடம் இருந்தது.

  6.Giant Super Cannons-சூப்பர் துப்பாக்கி

  "V3" மற்றும் "London Gun" என்னும் பல புனைப் பெயர்களில் அழைக்கப்பட்ட ஜெர்மன் நாட்டின் இந்த மிகப்பெரிய சூப்பர் துப்பாக்கி 140 மீட்டர் நீளமுடையது. 140 கிலோ வெடி பொருட்களை வெடிக்கச் செய்யும் திறனுடையது. 165 கி்.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளையும் குறிவைத்துத் தாக்கக் கூடியது. பிரான்ஸ் நாட்டு கடற்கரைப் பகுதி அருகில் தோண்டப்பட்ட குகையில் இருந்து இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் நகரைத் தாக்கும் திறனுடையது.

  7. Stealth Bombers-ஜெட்

  Arado E.555 மற்றும் Horton HO 229 என்னும் ஜெட் விமானங்கள் மூலமாக ஐரோப்பாவிலிருந்து பறந்து சென்று அமெரிக்காவின் நியூயார்க் நகர் மீது அணுக் குண்டுகளை வீசும் திட்டம் ஜெர்மனியிடம் இருந்தது. அதற்கேற்ற ஜெட் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை.

  8. Guided Point-Defense Rockets

  ஈராக் போரின் போது ஸ்கட் ஏவுகணைகளை வழியிலேயே தாக்கி அழித்த பேட்ரியட் ஏவுகணைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதற்கும் பல ஆண்டுகளுக்கும் முன்பே, இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியர்கள் Bachem Ba 349 என்னும் பாதுகாப்பு ராக்கெட்டை உருவாக்கத் திட்டமிட்டனர். ஆனால் இந்த ராக்கெட் சோதித்துப் பார்க்கும் பொழுது விபத்தினைச் சந்தித்தது. சோதனையின் போது வெடித்துச் சிதறியதால் பைலட் உயிரிழந்தார்.

  9. Man-Portable Anti-Aircraft Rockets-பாதுகாப்பு ஆயுதம்

  போர் விமானத்தைத் தாக்கி வீழ்த்தக் கூடிய வகையில் அமைந்த வான் பாதுகாப்பு ஆயுதம். இதனைக் கையால் தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்க ஜெர்மனி முயன்றது. இதனை ஜெர்மன் மொழியில் Fliegerfaust என அழைத்தனர்.

  10. Gigantic Mega Tanks-

  இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி பயன்படுத்திய பீரங்கிகள் அனைவரையும் மிரள வைத்தன. மிகவும் மேம்பட்ட அதிகத் திறன் வாய்ந்த பீரங்கிகளைத் தயாரிக்க ஜெர்மனி முற்பட்டது. P.1000 Ratte மற்றும் P.1500 Monster என்னும் பெயரில் மிகப்பெரிய பீரங்கிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இது முறையே 1000 டன் மற்றும் 1500 டன் எடையுள்ள வகையில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை.

  11. Guided Missiles

  V1 மற்றும் V2 ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி எதிரிகளை அச்சுறுத்திய ஜெர்மனி, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தியது. தொலைக் காட்சி வழியாக தரையிலிருந்து வானுக்குச் செல்லும் ஏவுகணை, தந்தித் தொடர்பு வழியாக வானிலிருந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணை ஆகியவையும் ஜெர்மனியின் தாயரிப்புத் திட்டத்தில் இருந்தன.

  12. Spherical Tanks-சிறிய பீரங்கி

  ஒரு படை வீரர் மட்டும் அமர்ந்து இயக்கக் கூடிய கோள வடிவிலான சிறிய பீரங்கியும் ஜெர்மனியின் தாயரிப்பில் அடங்கும். ரஷ்யப் படையினரிடம் சிக்கிய இந்தச் சிறிய பீரங்கி மாஸ்கோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

  13. Orbital Mirror Lasers-தொழில்நுட்பக் கருவி

  ஜெர்மானியர்களால் "Sun Gun" என அழைக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கருவி ஒரு மைல் அளவு விட்டம் கொண்ட கண்ணாடியாகும். இதனை வான் வெளிக்கு ஏவி, சூரியனுடைய ஒளிக்திர்களை உள்வாங்கி அந்த வெளிச்சத்தை பூமியில் உள்ள இலக்கினை நோக்கிக் குவிக்கும் வகையில் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.

  14. UFOs

  ஜெர்மனி தயாரிக்கத் திட்மிட்டிருந்த சில ஆயுதங்களும் விமானங்களும் திட்ட அளவிலேயே நின்று போயின. அவற்றுள் ஒன்று இனம் காண முடியாத பறக்கும் பொருளாகும். இதனை "Nazi UFO" என அழைத்தனர். இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில், உயரிய ராணுவ அதிகாரிகளைப் போர் முனையில் இருந்து காப்பாற்றி பத்திரமாக அழைத்து வருவதற்காக இந்த விமானம் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


  English summary
  Get hands on best deals with our premium gaming range of products come visit us at the Phoenix MarketCity : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more